ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன்,சாந்தன், முருகன் , நளினி உள்ளிட்ட 7 பேர் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எஅன் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமும் போடப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது . ஆனாலும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை.
பேரணியில் அற்புதம்மாள் தலைமை தாங்க அரசியல் கட்சி தலைவர்கள் அன்புமணி ரமதாஸ், சீமான், பண்ருட்டி வேல்முருகன், மல்லை சத்யா, பழ.நெடுமாறன் , வெள்ளையன், திரையுலக பிரபலங்கள் நடிகர் சஙக் தலைவர் நாசர், இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், சத்யராஜ் , இயக்குனர்கள் , துணை இயக்குனர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஊர்வலத்தின் இறுதியில் அனைவருக்கும் அற்புதம்மாள் நன்றி தெரிவித்தார். பின்னர் போலீசார் உதவியுடன் தலைமை செயலகத்துக்கு மனு அளிக்க அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அற்புதம்மாள் , வழக்கறிஞர் சிவகுமார்.இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், மணிமேகலை உள்ளிட்ட 4 பேர் முதல்வரை சந்திக்க அழைத்து செல்லப்பட்டனர்.



No comments:
Post a Comment