Sunday 5 June 2016

கலைஞர் பதில்கள் : குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி மறைவு

குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி மறைந்து விட்டாரே?

அவரது மறைவு குறித்தும், வாழ்க்கை வரலாறு குறித்தும் பல நாளேடுகளிலும் செய்தி வெளிவந்துள்ளது. 4-1-1990 அன்று நான் முதல் அமைச்சராக இருந்த போது சென்னை வந்த அவர் என் இல்லத்திற்கே தன்னுடைய துணைவியாருடன் வருகை தந்ததும், என்னுடன் அவர் அன்போடு உரையாடிக் கொண்டிருந்ததும், அதன் பின்னர் அவர் அண்ணா அறிவாலயத்திற்குச் சென்று சுற்றிப் பார்த்ததும் என் நினைவிலே நிலைத்திருக்கும் நிகழ்வுகளில் ஒன்று. நிறவெறிக்கு எதிராக தனது உணர்வுகளைப் பதிவு செய்யும் வகையில், ஒரு முறை தான் வென்ற ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை ஆற்றிலே தூக்கி எறிந்த பெருமகன் தான் முகமது அலி. அவர் மறைந்து விட்டாலும், குத்துச் சண்டை வரலாற்றில் அவர் பெயர் என்றென்றும் நிச்சயம் நிலைத்திருக்கும். வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்த அந்தப் பெருமகனின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Pic Courtesy : @TamilTheHindu

No comments:

Post a Comment