Sunday 5 June 2016

கலைஞர் பதில்கள் : சிறைச்சாலைகளில் கைதிகள் இறப்பு - தமிழக அரசுக்கு உயர் நீதி மன்றம் எச்சரிக்கை

சிறைச்சாலைகளில் கைதிகள் இறப்பது பற்றி தமிழக அரசு ஒரு வார காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதி மன்றம் எச்சரிக்கை செய்திருப்பதாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?

தற்போது எல்லாம் அ.தி.மு.க. அரசு, சென்னை உயர் நீதி மன்றத்தின் இப்படிப்பட்ட எச்சரிக்கைகளை, கண்டனங்களாக நினைப்பது இல்லை; அரசுக்கு நீதி மன்றம் வழங்குகின்ற பாராட்டு மழையாகத் தான் கருதிக் கொள்கிறார்கள். தமிழகத்திலே உள்ள மத்திய சிறைச்சாலைகளில் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை 264 கைதிகள் இறந்துள்ளனர். அதில் 140 கைதிகளின் இறப்பு தொடர்பான அறிக்கை இன்னும் வழங்கப்படவில்லை. விசாரணைக் கைதிகளுக்கு முறையான மருத்துவ வசதிகள் செய்து கொடுப்பதில்லை என்றெல்லாம் புகார் கூறி மத்திய சிவில் உரிமை மையத்தின் இணைச் செயலாளராக உள்ள வழக்கறிஞர் கே. கேசவன் தொடுத்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “Though the Bench had asked the Principal Secretary of Home Department on December 2, 2015, seeking explanation, the official was unable even after eight weeks. On March 25 this year, the court was informed that the affidavit was not ready, said the judges, adding, “The affidavit has not seen the light of the day. This is an extremely casual attitude towards as Court’s order.” சிறையில் கைதிகள் மரணமடைவது தொடர்பாகவும், அவர்களது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தோம். ஆனால் தேர்தல் நடைபெறுவதைக் காரணம் காட்டி, அதிகாரிகள் கால அவகாசம் கேட்டிருந்தனர். தற்போது தேர்தல் முடிந்து விட்டது. எனவே ஒரு வார காலத் துக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக் கிறார்கள். இதனை “High Court raps Government for being callous to Prison Deaths” (உயர் நீதி மன்றம், தமிழக அரசை, சிறைச்சாலைகளில் ஏற்படும் சாவுகள் குறித்து அக்கறையற்று இருப்பதற்குக் கண்டனம் தெரிவித்தது) என்று எழுதியுள்ளது.

No comments:

Post a Comment