Tuesday 7 June 2016

அதிமுகவில் அதிரடி மாற்றம் - முக்கிய நிர்வாகிகள் மாற்றம்


அதிமுகவுக்குள் அதிரடி மாற்றங்களை அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதா செய்துள்ளார். பல மாவட்டச்செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதிமுக தோற்ற மாவட்டங்களில் நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர். 

அதிமுக கட்சி தலைமை இன்று காலை வெளியிட்டுள்ள நிர்வாகிகள் மாற்றம் வருமாறு: இதில்  புதிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மாற்றம், புதிய செய்தி தொடர்பாளர்கள் நியமனம் ஆகியன இடம்பெற்றுள்ளன. 
ஜெயலலிதா -  பொதுச்செயலாளர்
மதுசூதனன் - அவைத் தலைவர்
பன்னீர்செல்வம் - பொருளாளர்
எடப்பாடி பழனிசாமி தலைமை நிலையச்செயலாளர்
தம்பிதுரை   கொள்கை பரப்பு செயலாளர்
துரை.கோவிந்தராசன் விவசாய பிரிவு செயலாளர்
ஆர்.பி.உதயகுமார் ஜெ.பேரவை செயலாளர்
நவநீதகிருஷ்ணன் - வழக்கறிஞர் பிரிவு செயலாளர்
பா.குமார் பாசறை செயலாளர்
வி.அலெக்சாண்டர் இளைஞர் அணி செயலாளர்
 அமைப்பு செயலாளர்கள்
 அமைச்சர் வளர்மதி,
 பா. நாராயணபெருமாள்,
 விசாலாட்சி 
செம்மலை
தளவாய் சுந்தரம்
சுதா கே.பரமசிவன்
ஜி.ராமச்சந்திரன் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்
விஜிலா சத்யனாந்த் -  மகளிர் அணி செயலாளர்
கீர்த்திகா முனியசாமி - மகளிர் இணை செயலாளர்
அ.தி.மு.க., மருத்துவ அணி செயலாளர் - டாக்டர் வேணுகோபால்
மாவட்ட செயலாளர்கள் மாற்றம் :கன்னியாக்குமரி மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக ஏ.விஜயகுமார் எம்.பி., மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த முருகையாபாண்டியன் எம்.எல்.ஏ., மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நாராயண பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக இருந்த தர்மருக்கு பதிலாக அமைச்சர் மணிகண்டன் ராமநாதபுரம் அதிமுக மாவட்ட செயலாளராகவும், திண்டுக்கல் மாவட்ட செயலாளராக இருந்த நத்தம் விஸ்வநாதனுக்கு பதிலாக திண்டுக்கல் மேயர் மருதராஜ் மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்ட செயலாளராக தங்க தமிழ்ச் செல்வன், கரூர் மாவட்ட செயலாளராக எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ., திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக தூசி கே.மோகன், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக என்.ஜி.பார்த்திபன் எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளராக எஸ்.ஆறுமுகம், தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக வி.பி.கலைராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.விழுப்புரம் தெற்கு  மாவட்ட செயலாளர் கதிர் தண்டபாணி மாற்றப்பட்டு குமரகுரு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாஜிக்கள் பதவி பறிப்பு : தோப்பு வெங்கடாசலம், முக்கூர் சுப்ரமணியம், நத்தம் விஸ்வநாதன், தளவாய் சுந்தரம், வி.பி.சுப்பிரமணி உள்ளிட்டோரின் கட்சி பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளன.
ஒழுங்கு நடவடிக்கை குழு, மனுக்கள் பரிசீலனை குழு, 234 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்ட தொகுதி செயலாளர் உள்ளிட்ட அமைப்புக்களும் கலைக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது
புதிய செய்தி தொடர்பாளர்கள் :பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன்,ஆர்.வைத்திலிங்கம், பா.வளர்மதி, நாஞ்சில் சம்பத், கோ. சமரசம், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், வைகை செல்வன், சி.ஆர்.சரஸ்வதி, க.பாண்டியராஜன், நிர்மலா பெரியசாமி ஆகிய 11 பேர் கட்சியின் புதிய செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment