Wednesday 22 June 2016

கச்சத்தீவு குறித்த மனு - உயர்நீதிமன்றம் ஏற்க மறுப்பு



கட்சத்தீவு விவகாரத்தை ஒட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதி மன்றம் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது.
கச்சத்தீவு விவகாரம் சட்டமன்றத்தில் அரசியல் அரங்கில் பரபரப்பாக எழுப்பப்படும் சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில்
 
இந்திய இலங்கை நாட்டிற்கிடையேயான 1974 கச்சதீவு ஒப்பந்ததை அமல் படுத்தி இந்திய மீனவர்களுக்கு பாரம்பரிய மீன் பிடி உரிமை பெற்று தர வேண்டும் என மீனவர் பாதுகாப்பு இயக்கத்தை சார்ந்த பீட்டர் ராயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த விவாகாரத்தில் இந்திய அரசு தான் முடிவெடுக்க முடியும். சென்னை உயர் நீதிமன்றத்தால் ஒப்பந்த விதிகளை மீறும்  இலங்கை அரசுக்கு உத்தரவுகள் பிறபிக்க முடியாது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு  உகந்தது அல்ல என கூறி வழக்கை தள்ளுபடி செயதனர்.

No comments:

Post a Comment