Thursday 23 June 2016

மேயர்களை மக்கள் தேர்வு செய்யும் சட்டம் ரத்து




மேயர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் ரத்து செய்யப்பட்டது.  உள்ளாட்சி தேர்தல்கள் குறித்த சட்டத்தில் மேயரை நேரடியாக மக்களே தேர்வு செய்ய வேண்டும் என இருந்தது. இதனடிப்படையில் 1996 மற்றும் 2001 தேர்தல்களில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் மேயராக தேர்வு செய்யப்பட்டார். 2001 ல் மேயர் மற்றும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ஸ்டாலின் அதில் ஒன்றை விட்டுதர வேண்டியதானது.
  2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நகராட்சி முன்வடிவு சட்டம் மூலம் மேயரை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கும் சட்டத்தை கொண்டு வந்தது. மா.சுப்ரமணியம் இதன் மூலம் மேயர் ஆனார். அதன் பின்னர் 2011 ல் மீண்டும் சட்டம் திருத்தப்பட்டு மக்களே நேரடியாக மேயரை தேர்வு செய்யும் வகையில் சட்டம் திருத்தப்பட்டது.
தற்போது 15 வது சட்டமன்றத்தில்  மேயரை மக்கள் தேர்வு செய்யும் முறையை ரத்து செய்யும் சட்ட முன் வடிவை  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று கொண்டுவந்தார். அதை அறிமுக நிலையிலேயே திமுக எதிர்த்தது. இந்நிலையில் இந்த சட்ட முன் வடிவம் மீதான விவாதம் நடத்தப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
 ஆதரவாக 132  எதிர்ப்பாக 88 வாக்குகளும் பதிவானது. இதன் மூலம் மேயரை மக்களே தேர்வு செய்யும் சட்டம் ரத்து செய்யப்பட்டு கவுன்சிலர்கள் தேர்வு செய்யும் சட்ட முன்வடிவு நிறைவேறியது.

No comments:

Post a Comment