Wednesday 22 June 2016

சரத் குமார் மருத்துவமனையில் அனுமதி


நடிகர் சரத் குமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத் குமார் சமீபகாலமாக இறங்கு முகத்தில் உள்ளார். அதிமுக ஆதரவு விலகியதால் நடிகர் சங்க தேர்தலில் தோல்வி, கட்சி உடைந்தது என பல பிரச்சனைகளில் சிக்கியவருக்கு மீண்டும்  தேர்தலில் போட்டியிட அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்தார்.

ஆனால் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தோல்வியை தழுவினார்.  சினிமா, அரசியல் என பரபரப்பாக இயங்கி வந்த சரத்குமாரை இதுபோன்ற தடங்கல்கள் முடக்கி போட்டன. இந்நிலையில் இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சரத்குமார் உடனடியாக ஆயிரம் விளக்கில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. 

No comments:

Post a Comment