Monday 20 June 2016

முன் ஜாமீன் பிரேமலதாவின் மனு உயர்நீதிமன்றம் தள்ளுபடி




திருப்பூரில்  ஜெயலலிதாவுக்கு எதிராக அவதூறாக பேசியதாக பிரேமலதாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பிரேமலதா முன் ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

கடந்த 15 நாட்களுக்கு முன் இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கிய நீதிபதி 2 வார காலத்திற்குள்  திருப்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி முன்  ஜாமீன் பெற வேண்டும், இரண்டு வாரகாலத்திற்கு தினமும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையுடன் வழக்கை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் புதிதாக திருப்பூர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும், போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்து போடும் விதியை தளர்த்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

 நீதிமன்ற நிபந்தனைகள் எதற்கும் கீழ்படியாமல் மீண்டும் பழையபடி மனுத்தாக்கல் செய்ததை கண்டித்த நீதிபதி வைத்தியநாதன் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திடும் விதியை தளர்த்த  கோரும் மனுவை தள்ளுபடி செய்தார். நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக வழக்கு செலவாக ரூ.5000/- கட்ட சொன்ன நீதிபதி திருப்பூரில் ஆஜராகி  முன் ஜாமின் பெற வேண்டும் என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment