Friday 17 June 2016

முடிந்தது வழக்கறிஞர் பிரச்சனை - சட்டத்திருத்த மசோதா தற்சமயம் தள்ளிவைப்பு



கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த வழக்கறிஞர் பிரச்சனையை நீதிமன்றம் தற்போது தீர்த்துள்ளது. 
 வழக்கறிஞர் சட்ட திருத்தம் தங்களது வழக்கறிஞர் தொழில் சுதந்திரத்தை பாதிப்பதாக வழக்கறிஞர்கள் சங்கங்கள் போரட்டத்தில் குதித்தன. வழக்கறிஞர் சங்கங்களுக்கு பார்கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியது. இதனால் இரண்டு தரப்பும் மோதும் சூழ்நிலை உருவானது. 

இதனிடையே வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டத்தை விட்டு பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும் தாம் வழக்கறிஞர்கள் மீது புதிய சட்டதிருத்த மசோதா மீது நடவடிக்கை எடுக்கும் எண்ணமில்லை என தலைமை நீதிபதி தெரிவித்தார். ஆனாலும் சென்னையை தவிர வழக்கறிஞர் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று உயர்நீதிமன்ற பதிவாளர் ரவீந்திரன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது.  
  
 வழக்கறிஞர் சட்ட திருத்தம் தொடர்பாகவும்,  நீதிமன்ற விதிக்குழுவை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.  அதில் மூன்று நீதிபதிகள் இருந்த விதிக்குழு மாற்றி அமைக்கப்பட்டு நாகமுத்து, எம்.எம் சுந்தரேஷ், மணிகுமார், பி.என்.பிரகாஷ், ராஜூவ் சக்தேர் ஆகியோர் புதிய விதிக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

அந்த குழுவிடம் வழக்கறிஞர் சட்ட திருத்தம் தொடர்பாக, சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கு ஏதுவாக வழக்கறிஞர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம், விதிக் குழு சட்ட திருத்ததின் மீது முடிவெடுக்கும் வரை எந்த நடவடிக்கையும் வழக்கறிஞர்கள் மீது எடுக்கப்படாது.

அதை விடுத்து தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது பழைய விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிமன்ற பதிவாளர் ரவீந்தரன் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் வழக்கறிஞர் சட்ட திருத்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

No comments:

Post a Comment