Friday 24 June 2016

காங்கிரஸ் தலைவர் பதவி ஈவிகேஎஸ் விலகல் உண்மையா - அடுத்து யார்?



காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ் விலகுவது கிட்டதட்ட உறுதியாகி விட்டது. அவரிடம் ராஜினாமா கடிதம் பெறப்பட்டதாக தகவல்.

தமிழக காங்கிரசுக்கு எப்போதும் இரண்டு முகம் உண்டு. ஒன்று திமுக ஆதரவு என்றால் அதற்கேற்ற தலைவர் அதிமுக ஆதரவு என்றால் அதற்கு ஏற்ற தலைவர் போடுவது வாடிக்கை.

கடந்த முறை ஜி.கே.வாசன் வெளியேறியவுடன் காங்கிரஸ் அவ்வளவுதான் என்ற கருத்து பலமாக இருந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைவராக அறிவிக்கப்பட்டார். அவரும் தடாலடி அறிவிப்புகள் , பேசுக்கள் மூலம் காங்கிரஸ் கட்சியை உயிர்ப்பாக வைத்துகொண்டார்.

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் திடீரென திமுகவுடன் கூட்டணி வைத்து கொண்டது. காங்கிரசுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கியதில் திமுகவுக்குள் கருத்து வேறுபாடு.

ஆனால் 41 தொகுதிகளில் தனக்கு வேண்டிய ஆட்களை ஈவிகேஎஸ் வேட்பாளராக போட்டுகொண்டார்  , பணம் வாங்கினார், சரியான ஆட்களை வேட்பாளராக போடவில்லை ,பல தொகுதிகளுக்கு பிரச்சாரத்திற்கே போகவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டுகள் ஈவிகேஎஸ் மீது கூறப்பட்டது. மேலும் 41 தொகுதிகளில் 8 இடங்களை மட்டுமே வென்றது காங்கிரஸ் மேலிடத்துக்கு அதிருப்தி.

இதையடுத்து அவரிடம் கடந்த வாரம் டெல்லி சென்ற ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் ராஜினாமா கடிதம் பெறப்பட்டது. மேலும் ராஜினாமா கடிதம் என்பது வழக்கமான நடைமுறைதான். ஆனால் தற்போது அது பெரிதாக்கப்பட்டுள்ளது. 

இது பற்றி காங்கிரஸ் நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது அவர் கூறியது. ராஜினாமா கடிதம் வாங்குவது வழக்கமான நடைமுறை. மேலும் ராகுல் தலைவராக பொறுப்பேற்கும் போது புதிய தலைவர் மாற்றம் வரலாம் என்றும் பேசப்படுகிறது. அதில் திருநாவுக்கரசு முதலிடத்திலும், சுதர்சன நாச்சியப்பன் இரண்டாம் இடத்திலும், செல்லகுமார், மாணிக்தாகூர் மூன்றாவது நான்காவது இடத்தில் இருக்கிறார்கள்.

தற்போது ஈவிகேஎஸ் ராஜினாமா என ஊடகங்களில் பரபரப்பாக செய்தி ஓடுகிறது. இதற்கு காரணம் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா சொன்னதாக வரும் தகவல். கோபண்ணா சில காலமாக அணி தாவும் முடிவுக்கு வந்துவிட்டார். ஆகவே இளங்கோவனிடம் வாங்கிய ராஜினாமா கடிதத்தை பற்றி மீடியாக்களில் அவர் வாய் திறந்துள்ளார் என்றார்.

அப்ப அவ்வளவு குழப்பத்துக்கும் காரணம் கோபண்ணா தான் என்றோம். ஆமாம் அவர் அதை இப்போது சொல்லியிருக்க கூடாது என்றார்.

No comments:

Post a Comment