Tuesday 7 June 2016

போட்டோ எடுத்ததற்கு கைதிகள் எதிர்ப்பு - கேமிராவை பறித்த போலீஸ் நீதிமன்றத்தில் பரபரப்பு

புழல் சிறையில் கடந்த ஆண்டு  செப்டம்பரில்  ஜெயிலர்  இளவரசன் உள்ளிட்ட காவலர்களை சிறைக்குள்  தாக்கிய வழக்கில்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட  வெடிகுண்டு வழக்கு விசாரணை குற்றவாளிகள் 11 பேரை  திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது படம் பிடித்த ஊடகவியலாளர்களுக்கு கைதிகள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்துக்குள் செல்லாமல் அடம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேமிராவை போலீசார் பறித்து சென்றதற்கு செய்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.



கடந்த  ஆண்டு செப்டம்பர் மாதம்  புழல் மத்திய  சிறை ஜெயிலர் இளவரன் ,  காவலர்கள் ரவி மோகன் முத்துமணி உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தியதாக  போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் நசீர் ,குத்புதின், அபுதாகீர் , அக்கீம் ,சாதிக்பாஷா,சாகுல் அமீது ,நவாஸ் , தமீம் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.  
இந்த வழக்கில் திருவொற்றியூர் குற்றவியல் நீதி மன்றத்தில்  நீதிபதி முன்பு இன்று அவர்கள் ஆஜர் படுத்தப்பட்டனர் அப்போது அதனை படம் பிடித்த செய்தியாளரை படம் பிடிக்ககூடாது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற வளாகத்தில் பிரச்சனையில் ஈடுபட்டு கேமிராவை பறிமுதல் செய்தால் தான் நீதிமன்றத்திற்குள் செல்வோம் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்  நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .அதனை அடுத்து காவல்துறையினர் செய்தியாளர்களிடமிருந்து கேமிராவை.பறித்து கொண்டு செய்தியாளரை காவல்நிலையம் அழைத்து சென்றதை அடுத்து 11 பேரும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஒத்துழைத்தனர் . காவல்துறையினரின் .இந்த செயலுக்கு மாவட்ட  ஊடகவியலாளர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர் .

No comments:

Post a Comment