Wednesday 22 June 2016

கோல்ட் பெல்லுக்கு யார் மணி கட்டுவது


சமீபத்தில் நடந்த அதிமுக செயற்குழுவில் முதல்வர் ஜெயலலிதா இரண்டு மூன்று அமைச்சர்களை பெயர் சொல்லி பாராட்டினார். அதில் ஒருவர் தான் இந்த கோல்ட். கோல்ட் எப்போதும் பெயருக்கு ஏற்றார் போல் கோல்டாகத்தன் இருந்தார். நீங்க சொல்றது போன ஐந்தாண்டு இப்ப கோல்ட் நிலைமையே வேறு என்றார் நண்பர். அப்படியா என்ன அப்படி மாற்றம் வந்துருக்கு என்றோம். 

 என்ன இப்படி கேக்குறீங்க கோல்டு இப்ப மூத்த அமைச்சர் அல்லவா , ஐந்தாண்டு கம்ப்ளீட் ஆகி மீண்டும் தொடர்ந்தால் மூத்த அமைச்சரா ? இதை யாரு சொன்னது ,  சரி மேலே சொல்லுங்க என்றோம். இதை யாரும் சொல்லலீங்க இதை சொல்றதே கோல்டு தாங்க . ஐந்தாண்டு கம்ப்ளீட் பண்ணி மீண்டும் தொடர்றவங்கத்தான் பல பேர் இருக்காங்களே , இவருக்கு பழைய துறையை விட பவரா துறை கொடுத்துருக்காங்க அல்லவா அதனால் தான் ஷாக் அடிச்சவர் மாதிரி ஆடுறாராம். 

இப்ப தனக்கு புது மின்சார சக்தி வந்தது போல் உணருகிறாராம், கூட இருக்கிறவர்களிடம் எல்லாம் அம்மாவே என்னை பெயர் சொல்லி பாராட்டிட்டாங்கன்னா பாருங்களேன் என்று சந்தோஷமா சொல்றாராம். முன்பெல்லாம் தொகுதியில் இருந்து கட்சி ஆட்கள் பார்க்க வந்தால் அழைத்து அமரவைத்து பேசுவார், கட்சி வேலைகள் , வேறு எதாவது உதவிகள் கேட்டால் செய்து கொடுப்பார். இப்ப அவரு ரேஞ்சே வேறு அல்லவா அதனால் இப்ப யாரையும் மதிக்கிறது இல்ல.
யாராக இருந்தாலும் எந்த டீலிங்காக இருந்தாலும் மகனை பாருங்க என்கிறாராம், மகனை பார்க்க முடியவில்லை ஐயா என்றால் அப்ப மறுமகனை பாருங்கன்னு சொல்றாராம்.

 அமைச்சர்களுக்கு பிஏக்கள் இருப்பார்கள் இப்ப இவர்கள் தான் எல்லா அதிகார மையமாம்.  எப்படி இருக்குது பாருங்க கதை என்றார் அந்த நண்பர். இப்ப இந்த பிரச்சனை அம்மா காதுக்கு கட்சிக்காரங்க கொண்டு செல்கிறார்களாம், அவங்க ஃபீஸை பிடுங்கி மெயினையே கட் பண்ணிடுவாங்களே என்றார்.
சரி இப்ப இவர் மட்டும் தான் மூத்த அமைச்சரா இல்ல இவரைப்போல வேறு யாராவது  மூத்த அமைச்சர்கள் இருக்கிறாங்களா என்று கேட்டோம் இருக்காரு இன்னொருத்தரும் இருக்காரு. 

அவரும் தானே யார் சொல்லாமலும் புயல் மாதிரி வேலை செஞ்சவரு ஒரு காலத்துல , இரண்டாவது என்ட்ரி இப்ப அவரையும் சம்பந்தா  சம்பத்தமில்லாம சாரி சம்பந்தமில்லாம பேச வைக்குதாம், இவரு பார்க்க சொல்றது அவருடை மகனை  மட்டும் தானாம். டீலிங்குன்னு வ்ந்துட்டா வெளியாள நம்ப முடியாது பாருங்க என்றார். அதுவும் சரிதான் வேறு எதாவது இருக்கா என்றோம். கிளம்புங்க விட்டா வெல்லத்து மேல ஈ மொய்க்கிறது போல் மொய்ப்பீங்களே நாளை புதுக்கதை சொல்கிறேன் போய்ட்டு வாங்கன்னு நண்பர் அனுப்பி வைத்தார்.

No comments:

Post a Comment