Tuesday 21 June 2016

எம்.எல்.ஏ ஹாஸ்டலில் நூதன முறையில் செல்போன்கள் அபேஸ் - பலே ஆசாமிக்கு போலீஸ் வலை



சென்னை சேப்பாக்கம் எம்.எல்.ஏ ஹாஸ்டலில் சினிமா சூட்டிங் நடப்பதாக கூறி செல்போன்களை நூதன முறையில் பறித்து சென்றுள்ளார் ஒரு பலே ஆசாமி.

நேற்று சென்னை சென்ட்ரல் , அண்ணாசாலை பகுதிகளி்ல் வேலைக்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த வாலிபர்கள் சிலரிடம் ஒரு டிப் டாப் ஆசாமி நைசாக பேச்சு கொடுத்துள்ளான்.

இந்த காலத்தில் நல்ல வேலை ஆள் எங்க சார் கிடைக்கிறார்கள், இப்ப கூட பாருங்க பெரிய நடிகர்கள் நடிக்கும் சூட்டிங் ஒன்று நடக்குது , அதுக்கு 20 பேர் தேவை ஆனால் எங்க கிடைக்கிறாங்க ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பளம் என்று பேசி உள்ளான்.

இதற்கு ஆசைப்பட்டவர்களை ஒன்றாக திரட்டி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள எம்.எல்.ஏ ஹாஸ்டலுக்கு அழைத்து வந்துள்ளான். பின்னர் இன்று ஷூட்டிங் இல்லை இன்று டான்ஸ் நடக்கிறது நாளையிலிருந்து ஷூட்டிங் என்று சொல்லி இந்த இடம் ரொம்ப பாதுகாப்பு மிக்க இடம் , அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் வந்து செல்லும் இடம் யாரும் செல்போன் வைத்திருக்க கூடாது உங்கள் செல்போன்களை இந்த கவரில் போட்டு கொடுங்கள் நான் அலுவலகத்தில் கொடுத்து விட்டு வருகிறேன் என்று கூறியுள்ளான்.

எல்லோரையும் வாசலிலேயே நிற்க வைத்து எல்லோருடைய செல்போன்களையும் மறக்காமல் சுவிட்ச் ஆப் செய்ய சொல்லி வாங்கி கவரில் போட்டு எடுத்து உள்ளே செல்வது போல் பாவலா காட்டி மறுவாசல் வழியாக செல்ப்போன்களுடன் மாயமாகி விட்டான்.

 அவன் சென்று வெகு நேரமாக வராததால் சந்தேகமடைந்து உள்ளே சென்று விசாரித்துள்ளனர். அப்போதுதான் தெரிந்தது நடனம் ,சூட்டிங் எதுவும் நடக்கவில்லை என்று. 
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கும் இங்கும் தேடி பார்த்துவிட்டு புகார் அளிக்க விருப்பமில்லாமல் பலாரும் சென்று விட்டனர்.

 வண்ணாரப்பேட்டையை சேர்ந்த காமேஷ் (22) என்ற வாலிபர் மட்டும் புகார் அளித்துள்ளார். இது போன்று வேலை என்று சொல்லி அப்பாவிகளை ஏமாற்றி செல்போன்களை பறித்து செல்வது இது மூன்றாவது முறை என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் அந்த பலே ஆசாமியை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment