Wednesday 22 June 2016

ஹெல்மட்டை மறந்துடாதீங்க...


கட்டாய ஹெல்மட் சட்டம் பல முறை அமல்படுத்தப்பட்டாலும் அதை தொடர்ச்சியாக அமல்படுத்துவதில் போலீசார் பொதுமக்கள் இடையே தொடர் அலட்சியம் காணப்பட்டே வருகிறது.

 ஹெல்மட் கட்டாயம் அணிய வேண்டும் என்று கடந்த 2005ம் ஆண்டு தமிழக அரசு ஒரு உத்தரவை போட்டது. ஆனால் அப்போது பரவலாக எழுந்த எதிர்ப்பு காரணமாக விருப்பமுள்ளவர்கள் ஹெல்மட் அணியலாம் என்று விட்டு விட்டனர். பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கட்டாயமாக ஹெல்மட் அணியவேண்டும் என்ற உத்தரவை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பிறப்பித்தார். பின்னர் அரசும் அந்த உத்தரவை சட்டமாக்கியது.

 இதனால் ஹெல்மட் பற்றாகுறையே ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹெல்மட் பிரச்சனை பூதாகரமாக கிளம்பியது. அனைவரும் கட்டாயம் ஹெல்மட் அணிய ஆரம்பித்தனர். பின்னர் போக போக அது குறைந்தது.

தற்போது தலைமை நீதிபதி கவுல் நேற்று போலீசாருக்கு ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார்.அதில் ஏன் ஹெல்மட் சட்டத்தை அமல்படுத்த வில்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். தலைமை நீதிபதியே கேள்வி எழுப்பியுள்ளாதால் மீண்டும் ஹெல்மட் விவகாரம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இதனால் போலீசாரும் இருக்கிற பிரச்சனையை மறந்து ஹெல்மட் போடாதவர்களை பிடித்து அபராதம் விதிப்பார்கள்.

  தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துக்களில் அதிக அளவில் கடுமையான காயங்கள் உயிர் இழப்புகளில் சிக்குபவர்கள் இரு சக்கர வாகன ஓட்டிகளே. இதில் ஹெல்மட் அணியாமல் செல்வதால் சுமார் 80 சதவீதம் உயிரிழப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. கடந்த 2013ல் தமிழகத்தில் நடந்த 66 ஆயிரத்து 238 சாலை விபத்துக்களில் 15 ஆயித்து 563 பேர் இறந்துள்ளனர். 2014ம் ஆண்டில் நடந்த 67 ஆயிரத்து 250 சாலை விபத்தில் 15 ஆயிரத்து 190 பேர் பலியாகிவுள்ளனர். 

2015ம் ஆண்டில் அதே எண்ணிக்கைக்கு குறையாமல் விபத்து நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட இந்தியாவில் உள்ள  50 நக ரங்களில் 1,20,292 சாலை விபத் துகள் நடைபெற்றுள்ளன. இந்த விபத்துகளில் 17,007 பேர் உயிரி ழந்துள்ளனர். 80,380 பேர் காய மடைந்தனர். இந்த 50 நகரங்களின் பட்டியலில் சென்னை, கோவை நகரங்கள் 10, 11-வது இடங்களிலும், மதுரை, திருச்சி நகரங்கள் 32, 36-வது இடங்களிலும் உள்ளன என்பது அதிர்ச்சிக்குரிய தகவல்.

ஹெல்மட்டை பராமரிப்பதில் உள்ள சிக்கல்களை வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். குறைந்த அளவே எண்ணிக்கை உள்ள போலீசார் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் இருக்கும் நகரங்களில் எத்தனைவிதமான விஷயங்களில் தான் கவனம் செலுத்த முடியும் என்ற கேள்வியும் போலீசார் தரப்பில் எழுகிறது. உண்மைதான் ஒவ்வொருவரும் தம் பொறுப்பை உணரவேண்டும் என்பதே சரியாக இருக்கும். 

 விபத்தில் சிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள் முதலில் காயப்படுவது தலையில் தான். இதனால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம் ஆகவே தலைக்கவசம் உயிர்கவசம் அதை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு கூறுகிறது. நல்ல ஹெல்மட்டை, பாதுகாப்பாக அதற்குரிய முறைப்படி முறையாக அணிந்து செல்லுங்கள். 




No comments:

Post a Comment