Wednesday 22 June 2016

முதல்வர் பதிலுரையில் காவலர் நலன் இருக்குமா?




முதல்வர் ஜெயலலிதா 6 வது முறையாகவும் தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் தேர்வு செய்யபட்டுள்ளார். அதிமுக ஆட்சி என்றாலே போலீசாருக்கு சுதந்திரம் கொடுக்கப்படும், போலீசார் விஷயத்தில் கட்சிக்காரர்கள் தலையீடு இருக்காது, போலீசாருக்கான சலுகைகள் அதிகம் இருக்கும் என்பார்கள்.

 ஆனால் கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் போலீசார் எதிர்பார்த்த பல விஷயங்கள் நடக்காமல் தள்ளிபோடப்பட்டது. அதில் முக்கியமான இரண்டு விஷயங்கள் புதிய காவலர் தேர்வு மற்றும் பதவி உயர்வு. ஆண்டு தோறும் பணி ஓய்வு பதவி உயர்வு மற்றும் பிற காரணங்களால் ஸ்டேஷன்களில் காவலர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

 ஏற்கனவே பொதுமக்கள் காவலர் விகிதாச்சார முறைப்படி காவல் நிலையங்களில் காவலர்கள் இல்லை என்பது ஒருபுறம் இருக்க காலிபணியிடங்களை நிரப்புவது புதிதாக காவலர்களை தேர்வு செய்வது என்பது கடந்த ஐந்தாண்டுகளில் மிக குறைவு. அதற்கு முந்தையா திமுக ஆட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால் 2011 முதல் 2016 வரை அந்த எண்ணிக்கை குறைவு. இதனால் காவல் நிலையங்களில் போலீசார் பற்றாகுறை அதிகம் அதனால் ஏற்படும் பணிச்சுமை , மன உலைச்சல் மறுபுறம். போலீசார் பற்றாகுறை காவலர்களுக்கான சலுகைகளை பெற்றுத்தருவதில் அலட்சியம் காட்டும் மேலதிகாரிகள் போல் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் பார்க்க முடியாது.


இதே போல் பதவி உயர்வு விஷயத்திலும் மேலதிகாரிகளின் அலட்சியம் காரணமாக போலீசார் உரிய காலத்தில் வர வேண்டிய பதவி உயர்வு கிடைக்காமல் மன உலைச்சலில் இருக்கின்றர்.அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக எழுந்த பிரச்சனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அழகாக பயன்படுத்தி காவலர்கள் வாக்குகளை அள்ளினர்.

 எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்ர் குடும்பங்களின் 80 சதவிகிதத்திற்கு மேற்பட்டோர் வாக்குகள் திமுகவுக்கு விழுந்தது. அதற்கு காரணம் சாதாரண விஷயம் தான். பதவி உயர்வு என்ற விஷயத்தை திமுக கையில் எடுத்தது.
20 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்த காவலர்களுக்கு உதவி ஆய்வாளர் பதவி உயர்வு உடனே என்ற வாக்குறுதிதான் அது.

மு.க.ஸ்டாலின் கடைசி வாரத்தில் பதவி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றுவேன் என காவலர்களுக்கு செல்போனில் வேண்டுகோள் விட்டது பரவலாக எடுபட்டது. இந்த கோரிக்கையை காவலர்களின் நியாமான கோரிக்கையை காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் நிறைவேற்றுவார் என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

உயிரிழப்புக்கு ரூ 1 கோடி கொடுத்து காவல்துறையில் உள்ளவர்கள் அபிமானத்தை பெற்ற முதல்வர் நிரந்தர கோரிக்கையான காவலர் பற்றாக்குறையை போக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள படி 17000 காவலர்கள் உடனடி தேர்வு, 7வது சம்பள கமிஷனில் காவலர்களுக்கு தனி கவனத்துடன் சம்பள உயர்வு, தமிழகம் முழுவதும் சென்னையில் கொடுப்பது போல் உணவுப் படி , முறையான பதவி உயர்வு கோரிக்கையையும் நிறைவேற்றுவார் என்று காவலர்கள் நம்புகின்றனர்.

இன்றைய முதல்வர் அறிவிப்பில் வருமா? அப்படி இல்லாவிட்டாலும் எந்த நேரத்திலும் இது குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கின்றனர் காவலர்கள்.

No comments:

Post a Comment