Friday 17 June 2016

குழந்தைகள் கடத்தல் விசாரணை அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்


ஐந்தாண்டுகளில் காணாமல் போன குழந்தைகள் மீட்கப்பட்ட குழந்தைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்த தமிழக அரசு சிபிசிஐடி அதிகாரிகளை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னை எக்ஸ்னோரா அமைப்பை சேர்ந்த நிர்மல் என்பவர் ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் குழந்தை கடத்தலை தடுக்க வேண்டும், இரு குழந்தைகளை மீட்கவும்  நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என  கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி நாகமுத்து, பாரதிதாசன் முன்பு விசாரணை வந்தது நீதிபதிகள் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் காணாமல் போன குழந்தைகள் எத்தனை, அதில் எத்தனை குழந்தைகள்  இதுவரை மீட்கப்பட்டனர் என்பது குறித்து  2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலாளர், காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

 இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு கடந்த 2011 ஆண்டு முதல் 2015 ம் ஆண்டு வரை காணாமல் போன குழந்தைகளின் விவரங்கள், மீட்கப்பட்ட குழந்தைகளின் விவரங்கள், தற்போது வரை மீட்கபடாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் என விவரங்கள் பதில் மனுவாக தாக்கல் செய்யப்பட்டது.

2011 முதல் 15 வரை காணாமல் போன  ஆண் குழந்தைகள் 5056 மீட்கப்பட்டவர்கள்.   4000  நிலுவை. 252,  பெண் குழந்தைகள் 9670 மீட்கப்பட்ட குழந்தைகள் 9373 நிலுவை வழக்குகள் 383,   7 குழந்தைகள் குறித்த வழக்கில் காராணமே இல்லாமல் வழக்கு முடித்து வைக்கபட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டது.

குழந்தைகள் காணாமல் போனது தொடர்பாகவும், மீட்கப்படுவது தொடர்பாகவும் என்ன திட்டம் தமிழக அரசிடம் உள்ளது என்பது குறித்தும், விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி எஸ்.பி ராஜேஸ்வரி,   டி.எஸ்.பி ராஜாசீனிவாசன், ஆகியோரை நியமிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நியமிக்கப்பட்ட அதிகாரிகள் வரும் திங்கள் கிழமை குழந்தைகள் காணாமல் போவதை தடுக்கவும், மீட்பது குறித்த திட்டத்தை  நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment