Friday 17 June 2016

ஹிலாரி கிளிண்டனுக்கு ஜெயலலிதா வாழ்த்து




அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயககட்சி சார்பில் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட ஹிலாரி கிளிண்டனுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்து செய்தியில்:
ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நீங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். அமெரிக்க ஜனநாயக வரலாற்றில் ஒரு பெண் வேட்பாளராக முதல்முறையாக தாங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து பெருமிதம் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் கடந்த 2011 ஆம ஆண்டு நீங்கள் தமிழகம் வந்ததையும் பரஸ்பரம் நமது ஒத்த எண்ணங்களை பரிமாறி கொண்டதையும் நினைவு கூர்கிறேன். தாங்கள் அடுத்து மேற்கொள்ளவிருக்கும் பிரச்சாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.


 தங்களது அரசியல் வாழ்க்கையில் மேலும் பல முன்னேற்றங்களை அடைவீர்கள், அதன் மூலம் உலகில் உள்ள பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக நீங்கள் விளங்குவீர்கள்  என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment