Sunday 5 June 2016

மகனை நரபலி கொடுக்க வந்தாரா ? தந்தையிடம் போலீசார் விசாரணை


அமாவாசைக்கு மூத்தமகனை பலி கொடுத்தால் செல்வ செழிப்பு வரும் என்ற நம்பிக்கையில் , நேற்று இரவு அரூரில் உள்ள கோபிநாதன்பட்டியில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் தனது ஐந்து வயது மகனை தந்தை பரசுராமன் கட்டிபோட்டு நரபலி கொடுக்க முயன்றதாக வீச்சரிவாளுடன் பொதுமக்கள்  பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.  அமாவாசைக்கு மூத்தமகனை பலி கொடுத்தால் செல்வ செழிப்பு வரும் என்ற நம்பிக்கையில் பலிகொடுக்க வந்துள்ளதாக கூறப்பட்டாலும் அதைசிறுவனின் தந்தை பரசுராமன் மறுத்துள்ளார்.


குடும்பத்தில் அதிகம்  கஷ்டம் இருந்தது. இதனால் சாமி கும்பிடுவதற்காக மகனுடன் கோவிலுக்கு வந்தேன். அமாவாசை நாள் என்பதால் இரவில் வந்து சாமி கும்பிட்டு விட்டு போகலாம் என்று  வந்தேன், நான் போதையில் இருந்ததால் அங்குள்ள பொதுமக்கள் தப்பாக நினைத்து நரபலி கொடுக்க வந்ததாக கூறி என்னை போலீசில் ஒப்படைத்து விட்டனர். என்னுடைய மகனை நானே எப்படி கொலை செய்ய நினைப்பேன் என்று. தந்தை பரசுராமன் தெரிவித்துள்ளார். வீச்சரிவாள் எப்படி வந்தது என்ற கேள்விக்கு தாம் எடுத்துவரவில்லை என தெரிவித்துள்ளார். ஆனாலும் போலீசார் அவரை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment