Monday 6 June 2016

மசூதிகளில் உள்ள கூம்பு வடிவ ஸ்பீக்கர்கள் அகற்றம் போலீஸ் நடவடிக்கை



சென்னையில் உள்ள மசூதிகளில் வைக்கப்பட்டுள்ள கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அகற்றி ஒலி பெருக்கி பெட்டிகளை வைக்க சென்னை போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மசூதிகளில் ஐந்து வேலை தொழுகைக்காக பாங்கு சொல்லப்படும். இது இஸ்லாமியர்களின் தொழுகைக்கான அழைப்பாகும். தினமும் ஐந்து வேலை நடக்கும் தொழுகையில் தொழுகைக்கான ஞாபகமூட்டலாக பள்ளிவாசலில் இருந்து அதற்கென உள்ளவர் சில நிமிடங்கள் சொல்லப்படும் இந்த பாங்கு சொல்வார். தினமும் ஐந்து வேலைகள் சொல்லப்படும் இந்த பாங்கு ஓசையை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்து மக்களும் நேரத்தை குறிக்கும் விதமாக எடுத்துகொள்வதுண்டு. 
 இவ்வாறு கூறுவதற்கு எல்லா பள்ளி வாசல்களிலும் மினார் எனப்படும் உயர்ந்த கோபுரத்தில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை வைத்திருப்பார்கள். ஆனால் காலம் மாற மாற கூம்பு வடிவ ஒலிபெருக்கிக்கு போலீசார் தடை விதித்தனர். அனைத்து கூட்டங்கள் , விழாக்களில் ஸ்பீக்கர் பாக்ஸ்களே பயன்படுத்தப்பட்டன. பல பள்ளிவாசல்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டு ஸ்பீக்கர்கள் அமைத்துவிட்டனர். ஆனாலும் கூம்பு வடிட ஒலிபெருக்கிகள் அலங்கார பொருட்களாக பேருக்கு இருக்கும். சில பள்ளிவாசல்களில் இன்றும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை பயன்படுத்தி வருவதை ஒட்டி போலீசார் அவைகளை அகற்றி ஸ்பீக்கர் பாக்ஸ்களை வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment