Sunday 12 June 2016

அன்புமணிக்கு சிக்கல் ஆரம்பம்?- பாமகவில் வருகிறதா மாற்றம்



மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என அமெரிக்க பாணியில் நவீன பிரச்சாரத்துடன் அன்புமணி முதல்வர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். பிரச்சாரத்தில் பாமக தலைவர்கள் எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு அன்புமணி பிரச்சார ஸ்டைல் புகுத்தப்பட்டது.

கூட்டணி அமையாத நிலையில் (பல கட்சிகள் கூட்டணிக்கு வருவதற்கே அன்புமணி முதல்வர் என்ற கோஷமே தடையாக இருந்தது) தனித்து களம் காணும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தோல்வி நிச்சயம் என தெரிந்தும் அன்புமணி தான் முதல்வர் , 234 தொகுதிகளில் வேண்டுமானால் 34 தொகுதிகளை விட்டு கொடுக்கிறோம் என்றெல்லாம் ராமதாஸ் பேசினார்.



முதல்முறையாக திராவிட கட்சிகளுக்கு எதிராக மூன்றாவது அணி அமைந்தது . அதனுடன் இணைந்து ராஜதந்திரமாக ஆட்சியை,  சில எம்.எல்.ஏ தொகுதிகளை வெல்லும் காரியத்தை செய்திருக்கலாம் . ஆனால் தனித்து போட்டி அன்புமணியை பிரதானப்படுத்தியது போன்றவைகளால் கட்சி தோல்வியை தழுவி உள்ளது என காடுவெட்டி குரு போன்ற முன்னணி தலைவர்கள் நினைக்கிறார்கள்.


கட்சியின் பிரதான பலமே வன்னியர் சங்கம் தான் அதை பலப்படுத்தி கட்சியை முன்னெடுத்து செல்லாமல் இது போன்ற நவீன பிரச்சாரங்களால் தோல்வியைத்தான் தழுவியுள்ளோம் நமது பழைய பாதைதான் சரி என்று உள்ளுக்குள் அன்புமணிக்கு எதிரான குரல்கள் ஒலிக்க துவங்கியுள்ளது.


அதிக அளவில் 5% க்கு மேல் ஓட்டு வாங்கியுள்ளதாக கூறப்பட்டாலும் ஒவ்வொரு முறையும் இளைஞர்கள் பாமகவை நோக்கி வருகிறார்கள். ஆனால் நடைமுறைக்கு ஒவ்வாத கோஷங்கள் அதீத கோஷங்கள் காரணமாக பழையவர்கள் வெளியே செல்கின்றனர் இதனால் என்ன லாபம் என்று காடுவெட்டி குரு உள்ளிட்ட மூத்த தலைவர்களால் வாதம் வைக்கப்படுவதாக கூறுகின்றனர்.


 நடைமுறைக்கேற்ற வகையில் கட்சியை மாற்றி ஐயா வெற்றிப்பாதையில் அழைத்து செல்வாரா? என்பதே இப்போதைய பாமக தொண்டர்களின் கேள்வியாக உள்ளது.

No comments:

Post a Comment