Tuesday 7 June 2016

அதிமுக தோற்ற மாவட்டங்களில் போலீஸ் அதிகாரிகள் களையெடுப்பு?


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தாலும் பல மாவட்டங்களில் பலத்த அடி வாங்கியுள்ளது. இதில் சென்னை , காஞ்சிபுரம், வேலூர் ,கிருஷ்ணகிரி,தர்மபுரி,திருவண்ணாமலை ,விழுப்புரம்,நீலகிரி,திண்டுக்கல், பெரம்பலூர்,அரியலூர்,கடலூர்  ,திருவாரூர் , புதுக்கோட்டை , விருதுநகர் ,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் திமுக சம இடங்கள் அல்லது கூடுதலான இடங்களை பெற்றது. அதிலும் கன்னியா குமரி மாவட்டத்தில் அதிமுக சுத்தமாக துடைத்தெறியப்பட்டது. 
தற்போது வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள நிலையில் தோற்றுப்போன அல்லது திமுக அதிகம் வெற்றிபெற்ற மாவட்டங்களில் என்னென்ன காரணங்கள் என ஆராயப்படுகிறது. இதற்காக உளவுத்துறை முடுக்கி விடப்பட்டு முழுமையான தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.கட்சிக்காரர்கள் பற்றிய தகவல்கள் ஒருபுறம், போலீஸ் அதிகாரிகள் பற்றிய தகவல் மறுபுறம் திரட்டப்படுகிறது. இதில் போலீஸ் அதிகாரிகள் மாவட்ட எஸ்.பி முதல் இன்ஸ்பெக்டர் வரை பாகம் வாரியாக தோல்வி அடைந்த தொகுதிகளில் லிஸ்ட் எடுக்கப்படுகிறது. லிஸ்ட் எடுத்த பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை இடமாற்றம் போன்றவை வேறு காரணங்களை வைத்து நடக்குமாம். 
தேர்தல் நேரத்தில் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் ஆடிப்போயிருக்கிறார்களாம். தற்போது முதற்கட்டமாக விருது நகர் மாவட்டம் முடிந்து முழு ரிப்போர்ட் போய் விட்டதாம். நடவடிக்கை லிஸ்டில் மாவட்ட எஸ்பியும் இருக்கிறார் என்கின்றனர். ஆனால் மாவட்ட எஸ்பி நேர்மையான கண்டிப்பு மிகுந்த அதிகாரி. அவரது பெயரும் லிஸ்ட்டில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.காவலர்கள் கடமையை செய்கிறார்கள் எங்களை பூத் ஏஜண்ட் லெவலுக்கு பார்த்தால் நாங்கள் என்ன செய்வது என்ற கேள்வி வைக்கப்படுகிறது. நியாயம் தானே.

No comments:

Post a Comment