Wednesday 22 June 2016

எங்க முகத்தையெல்லாம் காட்டமாட்டீங்களா? - வாங்கி கட்டிக்கொண்ட புதுமுகம்



நேத்துதான் கோல்ட்பெல் கதை சொன்னீங்க இன்னைக்கு என்ன இருக்குன்னு நண்பரை கேட்டேன். அமைச்சரவையில எத்தனை பெல் இருக்காங்க சொல்லுங்க என்று கேட்டார் நான் ஒன்று இரண்டு என்று எண்ண ஆரம்பிக்க அதை  அப்புறம் எண்ணுங்க முதல்ல இந்த பெல் கதைய கேளுங்க , முதல் முறையா ஜெயிச்சாரு. ரெண்டாவது என்ட்ரியில வாய்ப்பு கிடைச்சது. இப்ப குளிர் ஜுரம் வந்த மாதிரி நடுங்கிட்டு இருக்காரு என்றார்.

சந்தோஷமா இல்ல இருக்கணும் எதுக்கு நடுங்கணும் என்று கேட்டேன், வேலைய மட்டும் பார்த்தால் முதல்வர் கிட்ட பேரு வாங்கலாம் சந்தோஷமா இருக்கலாம் , அதை தாண்டி செய்த வேலைதான் இப்ப அவரை வாட்டுது.  அமைச்சர் பதவி கிடைச்சதும் மற்ற விபரங்களை கேட்டு தெரிஞ்சுக்கணும் அல்லவா. என்ன செய்யணும் , என்ன செய்ய கூடாது, யாரு மேலிடத்துக்கு நெருக்கமான ஆளு என்பதையெல்லாம் தெரிஞ்சு வச்சிக்கணும் அல்லவா.

 அதை தெரிஞ்சுக்காமா போனால் இப்படித்தான் வாங்கி கட்டிக்கணும். அப்படி என்னதான் செஞ்சாரு என்று கேட்டோம். அவரு அமைச்சர் ஆனவுடன் தன்னை பற்றி அதிகமா செய்தி வரணும்னு ஆசைப்பட்டார். அப்பத்தான் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆளுங்கட்சிக்கு ஆதரவான அந்த சானலை பார்த்துள்ளார். 

அதில் தன்னை பற்றி செய்தி வரவில்லை என்றவுடன் உடனே போனை போட்டு சானல் ஆட்களிடம் என் படத்தை எல்லாம் காட்ட மாட்டீங்களான்னு கடுமையா கேட்டிருக்கார். சானல் மேலிடம் மூலம் கட்சி மேலிடத்துக்கு தகவல் போக கூப்பிட்டு லெப்ட் ரைட் வாங்கியிருக்காங்க பார்ட்டி இப்ப அரண்டு போய் குளிர் ஜுரம் வந்த மாதிரி நடுங்கிகிட்டிருக்காரு. அதுதான் இப்ப டாப் மெசேஜ் , என்று சொல்லி விட்டு நடையை கட்டினார் நண்பர்.

No comments:

Post a Comment