Monday 6 June 2016

பெங்களூரு விமான நிலையத்தில் இளையராஜாவுக்கு அவமானம்


உலகமே வியக்கும் சிம்பொனி இசை போட்டவர். தன்னுடைய இசை மூலம் இந்தியாவெங்கும் அதையும் தாண்டி பெரும்பாலான உலக நாடுகளில் புகழ் பெற்றவர் இளையராஜா. சட்டுன்னு கோபப்பட கூடியவர். சமீபத்தில் அவரிடம் கேள்விக்கேட்ட இளைஞரிடம் அறிவிருக்கா? என்று கோபப்பட்டவர். அவர்  சமீபத்தில் சென்னை திரும்புவதற்கு பெங்களூரு விமான நிலையம் வழியாக வந்தார். விமான நிலையத்தில் பயணிகள் சோதனை பகுதியில் அவரது உடமைகளை சோதித்த விமான நிலைய அதிகாரிகள் அவர் பையிலிருந்த சுவாமி பிரசாதங்களை அனுமதிக்க மறுத்து விட்டனர். அவர் அது பற்றி விளக்கி சொல்லியும் அனுமதிக்க மறுத்து விட்டனர். இளையராஜா ஒரு போன் மூலம் இந்த பிரச்சனையை தீர்த்திருக்கலாம். ஆனால் அவர் வழக்கமான சுபாவத்தை விட்டு அமைதியாக நடக்கும் விஷயங்களை கவனித்துகொண்டிருந்தார்.


ஒருமணி நேரம் கழித்து தங்களுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்த அதிகாரிகள் அவரை பிரசாத பொருளுடன் பயணம் செய்ய அனுமதித்துள்ளனர். மிகப்பிரபலமான மனிதர் ஒருவரை எதைப்பற்றியும் கவலைப்படாமல் சாதாரண விஷயத்துக்காக விமான நிலைய அதிகாரிகள் நிற்க வைத்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த நிகழ்வை நியூஸ் 18 தொலைக்காட்சி உடன் சம்பவத்தை நேரில் கண்ட பயணியின் பேட்டியுடன் பிரத்யோகமாக ஒளிபரப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நன்றி நியூஸ் 18

No comments:

Post a Comment