Monday 6 June 2016

மக்கள் நலக்கூட்டணியிலிருந்து விலகுகிறாரா விஜயகாந்த்?



தொண்டர்கள் எதிர்ப்பு காரணமாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கட்சியில் நிர்வாக ரீதியான மாற்றங்களையும் விஜயகாந்த் செய்யவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் மக்கள் நலக்கூட்டணியிலிருந்து  இருந்து வெளியேறும் என்ற நிலையில்  தேமுதிக வெளியேறுமா? . இது பற்றி தேமுதிக வட்டாரத்தில் விசாரித்தபோது இப்போது வெளியேறும் அவசியம் என்ன வந்தது. திமுக , அதிமுக எல்லாம் ஒரு காலத்தில் சிங்கிள் டிஜிட் சீட் வாங்கவில்லையா அப்போதெல்லாம் அந்த கட்சிகள் அழிந்தா போய்விட்டது. 
 இதே கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் தொடரும். பொது தேர்தலுக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஆகவே இதே கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் பெருவாரியான இடங்களை கைப்பற்றும் , தனித்து நிற்பதால் யாருக்கும் பயனில்லை கூட்டணி என்றால் கூடுதல் பலம் என்று தெரிவித்தார். 
மேலும் இந்த கூட்டணி உடைவதில் ஆளுங்கட்சியை விட திமுகவுக்கே அதிக ஆர்வம் உள்ளது காரணம் எங்கள் வாக்குகள் பிரியும்போது அதிமுக அங்கு வெல்லும் என்று அவர்கள் நினைப்பதால் இதுபோன்ற வதந்திகளை கிளப்பிவிடுகிறார்கள் என்றார். 

No comments:

Post a Comment