Friday 10 June 2016

முற்றுகிறது மோதல் - பார் கவுன்சில்கள் அடக்குமுறை பால்கனகராஜ் பேட்டி


தமிழக மற்றும் அகில இந்திய பார் கவுன்சில்கள் அடக்குமுறை பற்றி அனைத்து மாநில தலைமை நீதிபதிகளிடம் முறையிட போவதா பால் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் சட்ட திருத்தத்தை  எதிர்த்து போராடி வரும் வழக்கறிஞர்கள் மற்றும் தலைவர்களை இனம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய பார்கவுன்சில் கடிதம் எழுதி உள்ளது. 
இது குறித்து இன்று பேட்டி அளித்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் பால் கனகராஜ் கூறியதாவது. போராட்ட குழு தலைவர்கள் திருச்சியில் வரும் 11 அன்று கூட உள்ளதாக அறிவிக்கப்பட்ட 32 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ளும்  கூட்டம் ஈரோட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. 
 இந்திய பார்கவுன்சில் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு ஒரு கடிதம் எழுதியதாக அறிகிறேன் சட்டதிருத்தத்தில் எதையெல்லாம் பதிப்பாக கருதுவதாக தெரிகிறதோ அது பற்றி வழக்கறிஞர் குழுவை அழைத்து பேச உள்ளதாகவும், போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்கள்,ஒரு சில தலைவர்கள் என்ற போர்வையில் இருப்பவர்கள் நடத்துகின்ற பேரணி , ஒதுக்கூட்டம் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 
வழக்கறிஞர்கள் ஒன்றுகூடி உருவாக்கப்பட்டவர்கள் பார்கவுன்சில் உறுப்பினர்கள், அவர்களால் உருவாக்கப்பட்டது பார்கவுன்சில் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இந்த சட்டம் வழக்கறிஞர்களுக்கு எதிரானது மட்டுமல்ல வழக்கறிஞர் தொழிலுக்கும் எதிரானது. அடிப்படை சுதந்த்திரத்தை பறிக்ககூடியது. ஆகவே நீங்களும் எங்களுடன் இணைந்து போராடி இருக்க வேண்டும். எங்கள் போராட்டம் சட்டத்துக்கு உடபட்டுத்தான் நடக்கிறது. பேரணி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் அனைத்தும் அனுமதி பெறப்பட்டுத்தான் நடக்கிறது.
அகில இந்திய பார் கவுன்சில் நேரடியாக் அதிகாரத்தை பயன்படுத்துகிறது.வழக்கறிஞர்களுக்கு பிரச்சனை என்றால் தமிழநாடு பார்கவுன்சிலுக்கு முறையீடு செய்து அங்கு நியாயம் கிடைக்காவிட்டால் அகில இந்திய பார் கவுன்சிலுக்கும் அங்கும் நீதி கிடைக்க்காவிட்டால் உச்சநீதிமன்றத்திற்கும் வழக்கறிஞர் செல்வர். ஆனால் இது போன்ற கடிதத்தை அகில இந்திய பார்கவுன்சில் எழுதுவது வேதனை தருகிறது. 

இது பற்றி இந்தியா முழுதும் உள்ள அனைத்து மாநில தலைமை நீதிபதிகள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை சந்திக்க உள்ளோம் , அவர்களிடம்தமிழ்நாடு பார்கவுன்சில் மற்றும் அகில இந்திய பார்கவுன்சில் எப்படி அடக்குமுறையை பயன் படுத்துகின்றனர் என்பது குறித்து விளக்க உள்ளோம். இவ்வாறு பாலகனகராஜ் தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment