Friday, 10 June 2016

உளுந்தூர் பேட்டையில் மாணவர்களுக்கு சூடு வைத்த ஆசிரியை சஸ்பெண்ட்


விழுப்புரம் மாவட்டம்  உளுந்தூர்பேட்டை பாலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியை மாணவர்களுக்கு கற்பூரத்தால் சூடு வைத்ததால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் புகாரின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியை போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.


இந்த பள்ளியில் பயிலும் 4ம் வகுப்பு மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என கூறி 8 மாணவர்களுக்கு ஆசிரியர் வைஜெயந்திமாலா கற்பூரத்தால் சூடு வைத்துள்ளார்.ப் இதனால்  மாணவர்கள் தீ காயத்துடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
  இது பற்றி வந்த புகாரின் பேரில் பாலி பள்ளி தலைமை ஆசிரியர் வரதராஜ். ஆசிரியை வைஜெயந்திமாலா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். போலீசார் ஆசிரியை வைஜெயந்தி மாலாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கைது செய்யப்படலாம்.   

No comments:

Post a Comment