Tuesday 7 June 2016

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வருகிறது சிக்கல்


  தமிழக காங்கிரஸ் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நியமிக்கப்பட்டது இக்கட்டான கால கட்டம். ஆனால் தனது அதிரடி காரணமாக காங்கிரஸ் கட்சியை தேர்தல் வரை நகர்த்தினார். கனிமொழி தயவால் காங்கிரஸ் திமுக கூட்டணி அமையவும் தேமுதிக மக்கள் நலக்கூட்டணிக்கு சென்றதால் 41 இடங்கள் கிடைக்க தனது வசூல் வேட்டையை நன்றாக நடத்தி விட்டதாக காங்கிரசில் உள்ள இவரது எதிர்ப்பாளர்கள் குற்றச்சாட்டாக உள்ளது. சோளிங்கர் தொகுதி முதல் பல தொகுதிகளில் இவர் வேட்பாளர்களை போட செய்த லீலைகள் பக்கம் பக்கமாக மேலிடத்திற்கு சென்றுள்ளது. காங்கிரஸ் 15 தொகுதிகளுக்கு மேல் வெல்ல வாய்ப்பு இருந்தும் வெள்ள முடியாமல் போனதற்கு ஈவிகேஎஸ் இளங்கோவனைன் செயல்பாடுகள் காரணம் என்பது அனைத்து கோஷ்டிகளாலும் மேலே கொண்டு செல்லப்பட்டுவிட்டது.                   இந்நிலையில் தலைவரை மாற்ற வேண்டுமென்ற  கோரிக்கையை இளங்கோவனின் எதிர் கோஷ்டி ப.சிதம்பரத்தை தவிர அனைவரும் மேலிடத்தில் கோரிக்கையாக வைத்துள்ளனர். பா.சிதம்பரத்திற்கு இளங்கோவன் போய் அந்த இடத்தில் சுதர்சன நாச்சியப்பன் வந்துவிட்டால். அதைவிட ஈவிகேஎஸ்சே இருக்கட்டும் என அவர் நினைப்பதால் எதிர்க்கவில்லை.மேலும் நினைத்தபடி எம்பி ஆனதால் இனி டெல்லி லாபி போதும் என நினைத்துவிட்டார். ஆனால் தங்கபாலு கோஷ்டி அப்படி நினைக்கவில்லை. இந்த முறை தங்க பாலு கோஷ்டிக்கு ஒரு வாட்ச்மேன் போஸ்டிங் கூட காங்கிரசில் இல்லை. சுத்தமாக துடைத்தெரியப்பட்டுவிட்டனர். மறுபுறம் திருநாவுக்கரசர் நீண்ட காலமாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காத்திருக்கிறார். இது தவிர சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்டோர் காத்திருக்கின்றனர். காங்கிரஸ் மேலிடமும் இளங்கோவனை மாற்றும் எண்ணத்தில் உள்ளனர். இந்த மாத இறுதியில் அகில இந்திய காங்கிரஸ் கூட்டம் நடக்கிறது. அதில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக முடி சூட்டப்பட வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். அப்படி நடந்தால் தமிழகத்திலும் மாற்றம் உடனே வரும் என்கின்றனர்.

No comments:

Post a Comment