Thursday 9 June 2016

வேந்தர் மூவிஸ் மதன் காணாமல் போன விவகாரம் --பாரபட்சமற்ற விசாரணை அதிகாரி நீதிபதிகள் உத்தரவு


வேந்தர் மூவிஸ் மதன் காணாமல் போன விவகாரத்தில் யார் விசாரணை நடத்துகிறார்கள் என்பதை போலீசார் அறிவிக்க வேண்டும் என போலீசாருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வேந்தர் மூவிஸ் பட தயாரிப்பாளர் மதன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாயமானார். அவரை கண்டுபிடித்து கண்டுபிடித்து தரக்கோரி, அவரது தாயார் தங்கம் போலீசில் புகார் அளித்திருந்தார் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்திலும்  ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார். 

 இந்த வழக்கு நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாஅசன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  விசாரணையின் போது, மாயமான மதன் தொடர்பான புகாரை விசாரிக்க உயர் அதிகாரி ஒருவரை நியமிக்கலாமா? பாரபட்சமற்ற அதிகாரி விசாரணை நடத்துவதாக சரியாக இருக்கும் பொன் மாணிக்கவேலை நியமித்தால் சரியாக இருக்குமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  அதை அரசிடம் கேட்டுத்தான் கூறவேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். யார் விசாரணை நடத்துவார் என்பதை டி.ஜி.பி., மற்றும் போலீஸ் கமிஷனரிடம் விளக்கம் பெற்று இன்று மாலையே அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பணம் பெற்று ஏமாற்றியதாக புகார்கள் குவிவதால், அனைத்து வழக்குகளையும் ஒரே அதிகாரி விசாரணை நடத்துவது தான் உகந்தது என நீதிபதிகள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment