Friday 10 June 2016

கபாலி பட பாடல்கள் திருட்டுத்தனமாக வெளியானதா?


 கபாலி படப்பாடல்கள் திருட்டுத்தனமாக வெளியானதாக தகவல்கள் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 


சூப்பர் ஸ்டார் படம் என்றாலே அது சாதனைகளை உடைத்து புதிய சாதனைகளை படைக்கும் ஒரு படைப்பாக தான் இருக்கும். அந்த வரிசையில் கபாலி படமும் ரசிகர்களால் அதிகம் எதிர் பார்க்கப்படுகிறது. கபாலி படத்தின் டீசர் வெளியான போது அது உடனடியாக கோடிக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்பட்டு ஷாருக்கானின்
இந்திப்பட சாதனையை முறியடித்தது.


டீசரை தொடர்ந்து கபாலி பட பாடல் வெளியீட்டு விழா ஜூன் 12 அன்று நடைபெறுவதாக இருந்தது. ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து இருந்த சூழ்நிலையில் திடீரென கபாலி பட பாடல் வெளியீட்டு விழா தள்ளிப்போனது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். 

இந்நிலையில் கபாலி பட பாடல்கள் திருட்டுத்தனமாக வெளியானதாக தகவல்கள் இப்போது வாட்ஸ் அப் , பேஸ்புக் , டுவிட்டர் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 16 நொடிகள் ஓடக்கூடிய நெருப்புடா பாடலும், 18 செகண்டுகள் ஓடக்கூடிய ரஜினி மீண்டும் 25 ஆண்டுகளுக்கு பிறகு அதே கபாலியா திரும்பி வந்துருக்கேண்டா என்று பேசும் வசனம் மற்றும் இசையுடன் ஒரு ஆடியோவும் வெளியாகி உள்ளது. 


கபாலி படத்தின் ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றை இன்று இரவு தயாரிப்பாளர் கலைப்புலி  தாணு வெளியிட உள்ளதாகவும் இன்று இரவு 11 மணிக்கு வெளியாக உள்ள தாகவும் தகவல் பரவி வருகிறது. இது குறித்து தயாரிப்பாளர் தாணு தரப்பில் எந்த தகவலும் இல்லை. கபாலி படத்தின் அனைத்து தகவலும் இந்த ஆப்பில் இருக்கும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இதை டவுன் லோடு செய்யலாம் என்கின்றனர். 



கபாலி படத்தில் 5 பாடல்கள் உள்ளன என்ற தகவல் மட்டும் வெளியாகி உள்ளது. 1.உலகம் ஒருவனுக்காக, 2.மாயாண்டி, 3.வீர துரந்தரா, 4. வானம் பார்த்தேன், 5.நெருப்புடா ஆகிய ஐந்து பாடல்கள் உள்ளன. என்ன காரணத்தாலோ பாடல் வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்போது ஆப் வருமா பாடல் லீக் ஆனதா என்பது கேள்விக்குறியே?

No comments:

Post a Comment