Friday, 24 June 2016

தொடர் கொலை கொள்ளை புகார் - உதவி ஆணையர் , ஆய்வாளர்கள் மாற்றம்



சென்னையில் ஒரு மாதத்தில் தொடர் கொலை கொள்ளை சமபவங்கள் காரணமாக சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. இது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து காவல் துறையில் விரைவில் மாற்றம் வர உள்ளது.  உதவி கமிஷனர் மற்றும் ஆய்வாளர்கள் அதிரடியாக மாற்றப்பட உள்ளனர்.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். வியாசர்பாடி உதவி ஆணையர் மன்னர் மன்னன் , ராயபுரம் உதவி ஆணையர் தென்னரசு அதில் குறிப்பிடத்தக்கவர்கள் என போலீஸ் வட்டார தகவல்கள் ஓடுகிறது.

பல விங்குகளில் உள்ள திறமையான அலுவலர்களை சட்டம் ஒழுங்குக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment