Sunday 5 June 2016

பிரபாகரன் மரணம் அடையவில்லை - இலங்கை அமைச்சரின் பேட்டியால் சர்ச்சை

பிரபாகரன் மரணம் அடையவில்லை மரண சான்றிதழ் கொடுத்தால் தான் நம்புவேன் என இலங்கை அமைச்சர் மகேஸ்வரன் பரபரப்பு பேச்சால் சலசலப்பு!
பிரபாகரன் மரண மடையவில்லை அது குறித்து சான்றிதழ் கொடுத்தால் தான் நம்புவேன் என இலங்கை அமைச்சர் மகேஸ்வரன் பரபரப்பாக பேசியுள்ளார்.
இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே 7 ஆண்டுகளுக்கு முன்பு இறுதி கட்ட போர் நடந்தது. அதில் விடுதலைப்புலி தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோர்கள் அவரது சடலத்தை இலங்கை ராணுவம் ஊடகங்களிலும் வெளியிட்டது. மேலும் இத்தகவலை இலங்கை அரசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஆனால், அவர் மரணம் அடையவில்லை வெளி நாட்டில் தங்கியுள்ளார் என ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். இச்சர்ச்சை கடந்த 7 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஆனால், பிரபாகரன் உயிரிழக்கவில்லை அவர் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் என இலங்கை அமைச்சர் மகேஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் விக்கிரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியில் துணை அமைச்சராக இருக்கும் இவர் சிங்கள வாரப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

‘இலங்கை இறுதிகட்ட போரில் பிரபாகரன் உயிரிழந்தாக கூறப்படுவதை நம்பமுடியவில்லை. எத்தனையோ பேருக்கு மரண சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், பிரபாகரன் இறந்து விட்டதாக மரண சான்றிதழ் வழங்கவில்லை.

எனவே, மரண சான்றிதழ் கொடுத்தால் தான் அவர் இறந்து விட்டதாக என்னால் நம்ப முடியும் என்றார். அவரது இக்கருத்து இலங்கையில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அத்தகைய கருத்துக்களை யாரும் பொருட்படுத்த வேண்டாம் என்று இலங்கை பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியா ராச்சி கூறியுள்ளார். இவர்தான் சில நாட்களுக்கு முன்னர் முள்ளிவாய்காலில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான உறவுகள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்காக நினைவு தூபியினை கட்டுவதற்கு யாரும் எதிர்க்க முடியாது. இம்முறையும் நான் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் கலந்துகொள்ள வேண்டும். நினைத்தால் கலந்து கொள்வேன்.

நான் கலந்து கொள்வதில் ஒரு பிரச்சனையும் இல்லை. நான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவள். இந்த நினைவு நிகழ்வில் நான் கலந்து கொள்வதனால் அரசு என்னை நிராகரித்தால் நான் வீடு செல்வதற்கும் அஞ்ச போவதுமில்லை. இதில் எமது உறவுகள் தான் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்காக நினைவு சுடர் ஏற்றுவதற்கு அரசு தடை விதிக்க முடியாது.முள்ளிவாய்க்கால் நினைவு சுடர் ஏந்த அனுமதி மறுத்தால் பதவி விலகுவேன் என்று பேட்டி அளித்த அமைச்சர் ஆவார். 

No comments:

Post a Comment