Monday 13 June 2016

டெல்லி புறப்பட்டு சென்றார் ஜெயலலிதா - தமிழக பிரச்சனைகள் குறித்து பிரதமருடன் முக்கிய ஆலோசனை


6 வது முறையாக பதவி ஏற்ற பின்னர் முதன் முறையாக பிரதமர் மோடியை சந்திக்க ஜெயலலிதா டெல்லி  சென்றார். பிரதமரை சந்திக்கும் முதல்வர் காவிரி, கச்சத்தீவு, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளுக்காக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 32 பக்க மனுவை பிரதமரிடம் அளிக்கிறார்


தமிழக முதல்வர் ஜெயலலிதா டில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக டில்லி செல்லும் ஜெ., தனி விமானம் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவரை அமைச்சர்களும் அரசு உயர் அதிகாரிகளும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர். விமான நிலையத்திலிருந்து காரில் தமிழ்நாடு இல்லம் செல்லும் அவர், ஓய்வுக்கு பின், மாலை 4:00 மணிக்கு, பிரதமர் வீட்டுக்கு செல்கிறார். 50 நிமிடங்கள் பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்துகிறார். மீண்டும் இரவு 7:00 மணிக்கு டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார் . 
முதல்வருடன் தலைமைச் செயலர் ராமமோகனராவ், முதல்வரின் செயலர்கள், நிதித் துறை செயலர், செய்தித் துறை அதிகாரிகள் டில்லி செல்கின்றனர்.தமிழகத்துக்கு தேவையான நிதி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசின் ஆதரவை பெறுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று டில்லி செல்கிறார் .இது தவிர காவிரி, முல்லைப்பெரியாறு, தமிழக மீனவர்கள் பிரச்சனை, கட்சத்தீவு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் அவர்களது சந்திப்பில்  விவாத பொருளாய் அமையும்.  சந்திப்பின் போது பிரதமரிடம் தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய 32 பக்க மனுவை ஜெயலலிதா அளிக்க உள்ளார்.

No comments:

Post a Comment