Monday 6 June 2016

பத்திரிக்கையில் வெளியான செய்திக்கு டிஎன்டிஜே மறுப்பு



ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தில் உள்ள இளைஞர் தங்கள் இயக்கத்தில் இருப்பதாக தவறான செய்தி பரப்பபடுவதாக டிஎன்டிஜே தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுச் செயலாளர் மு.முகது வெளியிட்டுள்ள  அறிக்கை:

கடந்த சில நாட்களாக சூடானிலிருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட முகம்மது நசீர் என்ற இளைஞர் பற்றிய செய்திகள் ஊடகங்களில் இடம் பெற்று வருகின்றன. தமிழ்நாட்டைச் சேந்த இவர் சிரியாவில் செயல்படும் ஐஎஸ் இயக்கத்தோடு தொடர்பில் இருந்ததாகவும் அவர்களது இயக்கத்திற்கு லோகோ உருவாக்கியதிலும் இவருக்கு பங்கு உள்ளது என்பது போலவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.

மேலும் முகம்மது நசீர் கடந்த 2008 காலகட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்திருந்ததாக ஒரு தகவல் உள்ளது. இந்தத் தகவல் உண்மைக்கு மாறானதும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமானதுமான செய்தியாகும்.

எந்த வித தீவிரவாத இயக்கங்களையும், தீவிரவாதச் செயல்களையும் எதிர்ப்பதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னிலை வகிக்கிற அமைப்பு என்பதை  அனைவரும் நன்கு அறிவர்.  சம்பந்தப்பட்ட நபருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் அமைப்பில் தொடர்போடு இருந்தார் என்பது சம்பந்தப்பட்டவரின் வாக்கு மூலமா, காவல்துறையின் அரியவகை கண்டுபிடிப்பா என்பது அதில் குறிப்பிடப்படவில்லை.

எந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லாத செய்தியை வெளியிட்டு, இந்த ஜமாஅத்திற்கு பெரும் களங்கத்தை ஊடகங்கள் தேடி தந்துள்ளன.

எனவே எங்களின் இந்த மறுப்பை வெளியிட்டு உண்மையை உலகிற்கு  ஊடகத்தின் வழியாகவே கொண்டு சேர்க்க வேண்டும்  என கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுச் செயலாளர் மு.முகம்மது யூசுப் அவர்கள் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.


No comments:

Post a Comment