Friday 10 June 2016

ஈரோட்டில் இன்று வழக்கறிஞர் ஆலோசனை கூட்டம் - பார் கவுன்சில் தடையை மீறி நடக்கிறது




வழக்கறிஞர் சட்ட திருத்தம் வழக்கறிஞர்களுக்கு எதிரானது மட்டுமல்ல வழக்கறிஞர் தொழிலுக்கே எதிரானது என வழக்கறிஞர் சங்கங்கள் ஒருங்கிணைந்து போராட துவங்கியுள்ளன. போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுப்போம் என பார் கவுன்சில் அறிவித்துள்ளது. 

வழக்கறிஞர் சட்ட திருத்ததை எதிர்த்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்த, நீலகிரி, தூத்துக்குடி, தஞ்சாவூர்,திருச்சி,மணப்பாறை, முசிறி, கோவை, கோவில்பட்டி, அறந்தாங்கி, துறையூர் உள்ளிட்ட 10 வழக்கறிஞர்  சங்கங்களின் மீது ஏன் பார் கவுன்சில் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க கோரி ஷோ-காஸ் நோட்டிஸ் அனுப்ப பட்டுள்ளது. 
இதற்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவும் பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. 

வழக்கறிஞர் சட்ட திருத்தம் குறித்த ஆலோசனை கூட்டம் திட்டமிட்டபடி இன்று துவங்கியது. வழக்கறிஞர் சங்க தலைவர் பால்கனகராஜ் தலைமையில் இந்த கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில்  32 மாவட்ட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழகம் புதுச்சேரியை உள்ளடக்கிய  240 சங்க நிர்வாகிகள் ஒன்று கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். 

பார்கவுன்சில் மிரட்டலை மீறி இன்று அனைத்து வழக்கறிஞர்கள் கூட்டம் துவங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் சட்டத்திருத்தத்தை எதிர்த்து அடுத்த கட்ட போராட்டத்தை எப்படி முன்னெடுத்து செல்வது என ஆலோசித்து முடிவெடுக்க உள்ளனர்.

No comments:

Post a Comment