Tuesday 14 June 2016

தங்கம் விலையில் விற்கும் தக்காளி விலை - குமுறலில் இல்லத்தரசிகள்


தமிழகத்தில் தினசரி வாழ்க்கையை தள்ளுவது இல்லத்தரசிகளுக்கு பெரும்பாடாக உள்ளது. காய்கறிகளின் விலை ஆகாயத்தில் பறப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். சென்னையில் போனவாரம் வரை 40 ரூபாய்க்கு விற்ற தக்காளி விலை இன்று ரூ.100 லிருந்து ரூ.120 ஐ நோக்கி சென்றுள்ளது. அதேபோல் பீன்ஸ் விலையும் ரூ.100 அளவுக்கு போய் விட்டது. 


இதற்கு காரணம் தினம் 120 முதல் 140 வரை வர வேண்டிய தக்காளி லோடுகள் இன்று 40 மட்டுமே வந்துள்ளது.  இதற்கு காரணம் பிப்ரவரி மாதமே வெயில் துவங்கியது தான். தண்ணீர் பற்றாகுறை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆகஸ்டு மாதத்தில் மழை துவங்கினால் விலை குறையும் என வியாபாரிகள் தரப்பில் கூறுகின்றனர். 

No comments:

Post a Comment