Sunday 5 June 2016

மத்திய - மாநில அரசுகளிடையே விரைவில் மும்மொழிகளில் தகவல் தொடர்பு வரக்கூடுமா?-- கருணாநிதி அறிக்கை

மத்திய - மாநில அரசுகளிடையிலான தொடர்பு மொழி குறித்து அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு விரைவில் தனது அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளனர். மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பல்வேறு முக்கிய தகவல்களை அவ்வப்போது அனுப்பி வருகிறது. இவற்றை எந்த மொழியில் அனுப்ப வேண்டுமென்று மத்திய அரசின் உத்தரவு எதுவும் இருப்பதாகத் தெரிய வில்லை. தற்போது தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு ஆங்கிலத்திலும், இந்தி பேசும் மாநிலங்களுக்கு இந்தியிலும் மத்திய அரசினால் தகவல்கள் அனுப்பப் படு கின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில் தமிழ் உட்பட மொத்தம் 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன. இந்த 22 மொழிகளையும் மத்தியிலும் ஆட்சி மொழிகளாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment