Tuesday 28 June 2016

வழக்கறிஞர் சட்ட விதி ஆய்வு - 5 நீதிபதிகள் குழு அமைப்பு


    சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி உயர்நீதிமன்ற  வழிகாட்டுதலில் வழக்கறிஞர்  சட்ட திருத்தத்தை , தமிழக  அரசு கடந்த மாதம் அரசிதழில் வெளியிட்டது.  இந்த புதிய விதியை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர் மற்றும் வழக்கறிஞர் சங்கங்கள் கடந்த சில நாட்களாக கோர்ட்  புறக்கணிப்பு  போரட்டம், ஆர்ப்பாட்டம்  உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தலைமை நீதிபதி ஒரு அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டார். சட்டதிருத்தத்தை அமல் படுத்தப்போவதில்லை, புதிய சட்டத்திருத்தத்தை ஆய்வு செய்ய நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டது விரிவு படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன் படி விரிவான குழு அமைக்கப்பட்டுள்ளது. 


இது குறித்து சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் ஜெனரல்  வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:   கடந்த 16 ஆம் தேதி நடைபெற்ற  உயர்நீதிமன்ற   நீதிபதிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி வழக்கறிஞர் தொழில் செய்யும் சட்ட விதி 34 (1) இல் சில திருத்தங்கள் கொண்டு வரபட்டுள்ளது.

 இந்நிலையில் இந்த புதிய சட்ட விதி குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்க ஐகோர்ட் நீதிபதிகள் மணிக்குமார், நாகமுத்து, ராஜீவ் சக்தேர், எம்.எம்.சுந்தரேஷ், மற்றும் பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய  குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஆய்வு செய்து ஆலோசனை நடத்தி  பரிந்துரைகளை அளிக்கும் இவ்வாறு  ஐகோர்ட் தலைமை  பதிவாளர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment