Tuesday 28 June 2016

ஒய்ஜி மகேந்திரன் மீது ரஜினி கோபம்



ஸ்வாதி கொலையில் காமெடி நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன்  சர்ச்சைக்குரிய வகையில் மத ஜாதிய துவேஷத்துடன் தனது ஸ்டேட்டசை பதிவிட்டிருந்தார், மேலும் தனது பதிவில் ஊடகங்கள், மாதர் சங்கம், திராவிட அமைப்புகள் , தலித்திய அமைப்புகளை கடுமையாக திட்டி பதிவிட்டிருந்தார். இதற்கு முத்தாய்ப்பாக ஒரு இஸ்லாமிய இளைஞரின் பெயரை குறிப்பிட்டு ஸ்வாதியை கொன்றவன் அவன் தான்   என்றும் குறிப்பிட்டிருந்தார். 

இதனால் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனம் எழுந்தது. போலீசார் குற்றவாளியை தேடி வரும் நிலையில் குற்றவாளி என்று ஒருவர் பெயரை சினிமா உலகின் பிரபலமான நபர் போட்டது பெருத்த சர்ச்சையை எழுப்பி உள்ளது.  


இந்நிலையில் ஒய்.ஜி.மகேந்திரனின் சர்ச்சைக்குரிய பதிவு குறித்த எதிர்ப்புகள் கிளம்பியவுடன் அது தனது பதிவல்ல வேறொருவர் பதிவை எடுத்து போட்டதாக பல்டி அடித்தார் ஒய்.ஜி.மகேந்திரன். பின்னர் இந்திய தேசிய லீக் சார்பில் ஒய்.ஜி.மகேந்திரனின் பதிவு மத , ஜாதிய கலவரத்தை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது.

 குற்றவாளியை தனக்கு தெரியும் என்று சொன்ன ஒய்.ஜி.மகேந்திரனை கைது செய்து விசாரிக்க வேண்டும் என கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்ற நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் கட்டாயம் நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக தடா ரஹீம் தெரிவித்தார். 

நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று தெரிவித்த தடா ரஹீம் , இது குறித்து தேவைப்பட்டால்  நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று தெரிவித்தார். 
இதற்கிடையே தனது சர்ச்சைக்குரிய பதிவை முகநூலிலிருந்து ஒய்ஜி மகேந்திரன் நீக்கியுள்ளார்.

 இது குறித்து விசாரித்த போது இந்த விவகாரம் ரஜினியின் காதுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் , பதிவை பார்த்து ஆத்திரப்பட்ட ரஜினி இதற்கு முன் ரவி ராகவேந்தர் மகனால் பீப் சாங் பிரச்சனை வந்தது, இப்ப இவர் இது போன்ற பதிவை போட்டு மீண்டும் பிரச்சனையா, நாமெல்லாம் கலைஞர்கள் பொதுவானவர்கள் , ஜாதி மதத்துக்கு அப்பாற்பட்டு இருக்கணும்.என்று வருத்தப்பட்டுள்ளார்.

வீணா சிஎம் முக்கு நம்மால சங்கடம் வரக்கூடாது என்று நெருங்கியவர்களிடம் வருத்தப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் உடனடியாக உளவுத்துறை முதல்வருக்கு விரிவான அறிக்கை அனுப்பி விட்டனர். ஏற்கனவே சட்டம் ஒழுங்கு பிரச்சனை இதில் இது போன்ற விவகாரங்களை தெரிந்தவர்களே எழுப்புவதை சிஎம் விரும்ப மாட்டாங்க இது இவருக்கு தேவை இல்லாத வேலை என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பீப் பாடல் சர்ச்சை  , பிலால் சர்ச்சை  காவல்துறை நடவடிக்கை பாயுமா எனபதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment