Wednesday 29 June 2016

ரஜினி என்றால் பிரம்மாண்டம்- தாணு என்றால் புதுமை




திரையுலகில் பிரம்மாண்டம் என்றால் எம்ஜிஆருக்கு அடுத்தது ரஜினையை கூறலாம். முடிசூடா மன்னரான எம்ஜிஆருக்கு நாடோடி மன்னன் பெரிய அளவில் வெற்றியை தேடி தந்தது அது முதல் உலகம் சுற்றும் வாலிபன் வரை எம்ஜிஆரின் பிரம்மாண்டம் வெற்றிப்படங்களாக தொடர்ந்தது.


 அதே அளவுக்கு தமிழ் திரையுலகில் அடுத்த பிரம்மாண்டத்தை அளித்தவர் ரஜினிகாந்த்.
பிரம்மாண்டம் என்றால் அது ரஜினி என்பது போல் புதுமை என்றால் அது தாணு. அவரது தயாரிப்பில் உருவான விஜயகாந்த் நடித்த கூலிக்காரன் படத்திற்கு தேவி பாரடைஸ் தியேட்டரில் விஜயகாந்த் பாரவண்டி இழுப்பது போல் சிலை வைத்தது அன்று ரசிகர்களால் பிரமிப்புடன் பார்க்கப்பட்டது. 

அப்போதெல்லாம் 2 ஷீட் 4 ஷீட் போஸ்டர்தான் ஒட்டுவார்கள். எல்லா நடிகை, நடிகரின் தலைகளும் அதில் இருக்கும். ‘முதன் முறையாக தாணு 6 ஷீட் போஸ்டர் போட்டார். அதிலும் ரஜினி முகம் மட்டுமே இருந்தது. மவுண்ட் ரோட்டில் ரஜினிக்கு 35 அடி உயரத்துக்கு கட் -அவுட்டும் வைத்தார். யார் படத்துக்கு அர்ஜுனுக்கு 100 அடி உயர கடவுட் வைத்தார்.


அந்த வரிசையில் தற்போது ரஜினி படமான கபாலியில் விளம்பரத்தில் பல்வேறு புதுமைகளை செய்து வருகிறார். படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகள்  ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கபாலி படத்தின் ஏர்லைன் பார்ட்னராக பிரபல விமான நிறுவனமான ஏர் ஏசியா இணைந்திருக்கிறது. கபாலி ரிலீஸ் தேதியில் சிறப்பு விமானங்களை பெங்களூரில் இருந்து சென்னைக்கு இயக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.



அதை விட புதுமையாக இந்தியாவில் இதுவரை எந்த நடிகளுக்கும் கிடைக்காத பெருமை கபாலி படத்திற்கு கிடைத்துள்ளது. தற்போது ஏர் ஏசியா  விமானத்தில் கபாலி புகைப்படங்களை ஒட்டவைத்து படத்துக்கு பெரிதளவில் விளம்பரம் செய்து வருகிறது ஏர் ஏசியா நிறுவனம்.முதன் முறையாக விமானத்தில் மிகப்பிரம்மாண்டமான கபாலி பட விளம்பரத்துடன் பிரம்மாண்டமான ரஜினியின் உருவத்துடன் வானில் வட்டமடிக்க உள்ளது ஏர் ஏஷியா .

No comments:

Post a Comment