Wednesday 29 June 2016

ஸ்வாதி கொலை கமிஷனர் விடிய விடிய விசாரணை - முக்கிய தகவல் கிடைத்ததால் தீவிரம்



தமிழகத்தில் இன்றைய ஹாட் டாபிக்காக மாறிப்போனது ஸ்வாதி கொலை வழக்கு. கொலை நடந்து 6 நாட்கள் ஆகியும் இதுவரை கொலைக்கான காரணம், கொலையாளி பற்றிய தகவல் போன்ற எதையுமே போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே இதன் சோகம். போலீசார் விசாரணை நடத்தினாலும் முட்டு சந்தில் மாட்டிகொண்ட மோட்டார் சைக்கிள் போல் முட்டி கொண்டு நிற்கிறது. இதற்கு முக்கிய காரணம் கொலைக்கான நோக்கம் என்ன என்பதே இதுவரை பிடிபடாதது தான். பெரிய அளவிலான அரசியல் கொலையோ, அல்லது பிரபலமான நபரின் கொலையோ அல்ல  சாதாரணமாக தனியொருவர் பகையால் நடந்த கொலை,இதில் சாதாரணமாக குற்றவாளி சிக்கி இருக்க வேண்டும் ஆனால் இதுவரை சிறு தடயம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்கும் அனைத்து முயற்சியிலும் போலீசார் இறங்கி உள்ளனர். கமிஷனரும், கூடுதல் ஆணையரும், இணை ஆணையரும் நேரடியாக விசாரணையில் இறங்கியுள்ளனர் கமிஷனர் நிமிடத்திற்கு நிமிடம் விசாரணையை கண்காணித்து தேவையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். கமிஷனரே நேரடியாக விசாரணையிலும் ஈடுபட்டுள்ளார். முதல் கட்டமாக ஸ்வாதியின் தந்தையிடம் விசாரணை நடத்திய கமிஷனர் டி.கே.ஆர், நேற்று இரவு திடீரென நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு நேரில் வந்தார் அங்கு நள்ளிரவு 1 மணி வரை சிலரிடம் நேரிடையாக விசாரணை நடத்தினார். கமிஷனரே நேரிடையாக விசாரணையில் இறங்கியது போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவாதியின் நண்பர்கள் மற்றும் சந்தேகப்படும் நபர்களிடம் அவர் விசாரணை நடத்தினார். விசாரணையின் முக்கிய கட்டத்தை நெருங்கி விட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சில அடிப்படையான தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதால் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

No comments:

Post a Comment