Thursday 30 June 2016

சென்னை சைக்கிள் போலீஸ் அனுபவ கதைகள்


சென்னை போலீசாருக்கு ரோந்துப்பணிக்காக வழங்கப்பட்ட 250 சைக்கிள்களில் 135 ஸ்டேஷன் காவலர்கள் நேற்று சென்னை முழுதும் இரவுப்பணியில் ஈடுபட்டனர். இது பற்றி அவர்கள் அனுபவத்தை கேட்டு தொகுத்துள்ளோம். Muthaleef.

சென்னையில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, கூலிப்படை அட்டகாசம்  போன்ற குற்ற சம்பவங்கள் தினம் தினம் நடந்தது வரும் நிலையில் இதெற்கெல்லாம் மகுடம் வைத்தார் போல நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம் பெண் சுவாதியை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


குற்றவாளியை பிடிக்க முடியாமல் திணறி வரும் சென்னை போலீஸ் உயரதிகாரிகள் திடீரென மேற்கண்ட அனைத்து குற்றங்களுக்கும் ஒரே நிவாரணி என்று ஒரு முறையை கண்டுபிடித்துள்ளனர். அரசு மருத்துவமனையில் எல்லா நோய்களுக்கும் ஒரே மாத்திரை  கொடுப்பதை போல அனைத்து குற்றங்களையும் தடுக்க ஒரே வழி சைக்கிளிங் போலீஸ் எனப்படும் சைக்கிள் ரோந்து திட்டம்.



 ஆட்கள் பற்றாக் குறையில் சிக்கித் தவித்து நிற்கும்சென்னை போலீசுக்கு நேற்று  முதல்வர்  கையால் சீட் கவர் கூட இல்லாமல் 250 சைக்கிளும் 100 இருசக்கர மோட்டார் வாகனமும் வழங்கப்பட்டது. மேலுக்கு நல்ல திட்டம் எனபது போல் தோற்றமளித்தாலும் இது வெகுநாள் நீடிக்க கூடிய திட்டம் அல்ல என்கின்றனர் போலீஸ் வட்டாரத்தில். 

இது பற்றி ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசிய போது அவர் கூறியதாவது.

மென் மேனேஜ்மென்ட் எனப்படும் மனித ஆற்றலை முறையாக பயன்படுத்தி குற்றங்களை தடுக்க தேவையான வழிமுறை நடைமுறைகளை பின்பற்றாததால் சென்னை போலீசில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள 403 இருசக்கர மோட்டார் வாகனங்களை இயக்கவே காவலர்கள் இல்லை.



 பாதிக்கும் மேற்பட்ட வாகனங்கள் காவல் நிலையத்தில் துருபிடித்துக் நின்று கொண்டிருக்கும் நிலையில், புதிதாக அதுவும் சைக்கிள் கொடுத்துள்ளனர். யதார்த்தம் எனபது குற்றவாளிகள் கையில் எடுக்கும் நவீன வசதிகளை விட கூடுதலாக காவல்துறை எடுத்தால் மட்டுமே குற்றங்களை தடுக்க முடியும். ஆனால் இது போன்று பின்னோக்கி போகும் திட்டங்களால் என்ன புதிதாக விளைய போகிறது என்றால் ஒன்றுமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.


இரவு நேரங்களில் காவல்துறை சட்டப்படி இரண்டு காவலர்கள் சேர்ந்துதான் ரோந்து அலுவல் செல்ல வேண்டும் ஆனால் அந்த விதிமுறைகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு ஒவ்வொரு காவலர்களையும் தனித்தனியாக ரோந்து அலுவலுக்கு அனுப்பப்படுகிறது இதனால் மிகப் பெரிய ஆபத்தை சென்னை காவலர்கள் சந்திக்க உள்ளனர். சைக்கிளில் இரவு ரோந்த்து பணியில் தனியாக  செல்லும் காவாலர் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரலாம். 

இரவு ஒன்பது மணி முதல் மறுநாள் காலை ஏழு மணி வரை அதாவது பத்து மணி நேரம் சைக்கிளை ஓட்டுவது நடைமுறை சாத்தியம் இல்லாதது ஆனால் 10  மணி நேரம் ஓட்ட  சொன்னதாக தகவல் வந்துள்ளது. இது போன்ற பணிகளில் 40 வயதுக்குட்பட்ட திடகாத்திரமான  இளைஞர்களை பயன்படுத்தலாம் ஆனால்  ஏற்கனவே இதய நோய், ரத்த அழுத்தம் உள்ள 50 வயதிற்கு மேற்பட்டவர்களையும் ஓட்ட சொல்வதுதான் கொடுமை என்கின்றனர் போலீசார்.ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் 8 முதல் 10 கி.மீ தூரம் எல்லை இருக்கும்.

தற்போது 135 காவல் நிலையங்களில் இருக்கும் சுமார்  400க்கும் மேற்பட்ட  பைக்குகளை இயக்காமல் சைக்கிளை இயக்குவதால் காவல் துறையின் முதல் பணியான குற்றத்தடுப்பில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட  வாய்ப்புள்ளது. இதன் விளைவு இனிவரும் நாட்களில்  கண்கூடாக காண இருக்கிறோம் இது காவல் துறைக்கும் தமிழக அரசிற்கும் நல்லதல்ல என்று தெரிவித்தார்.


ஒரு திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பது சரியல்ல இது ஒரு அறிமுக முயற்சிதான், இந்த பணி வெற்றி பெற்றால் மேலும் விரிவு படுத்தப்படும் என்று காவல்துறை உயர் அதிகாரி ஒருவார் தெரிவித்தார்.

டெய்ல் பீஸ்: நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களிடையே மைக்கில்  பேசிய துணை  ஆணையர் ஒருவர் பார்த்து ரோந்து செல்லுங்கள் வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்து எதாவது நிகழ்ந்து விடப்போகிறது. அப்புறம் இந்த திட்டம் பிரச்சனையாகி நின்றுவிட போகிறது என்று எந்திரதனமாக பேசியது காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment