Thursday 30 June 2016

ஆலோசனை கூட்டம் காய்ச்சி எடுத்த முதல்வர் - கைகட்டி நின்ற உயர் அதிகாரிகள்




தலைமை செயலகத்தில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளை முதல்வர் காய்ச்சி எடுத்துள்ளார். பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் தலைகுனிந்து நின்றுள்ளனர்.

தமிழகத்தில் கூலிப்படை அட்டகாசமே இல்லை என்று முதல்வர் சட்ட்டசபையில் அறிவித்தார். அன்றைய தினமே வியாசர்பாடியில் ரவி என்ற வழக்கறிஞர் வெட்டிகொலை செய்யப்பட்டார்.  இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஸ்வாதியின் கொலை ஆவேச அலையை எழுப்பி விட்டது.


போலீசாரின் செயல்பாடின்மை, பெருகி வரும் கொலை கொள்ளை, செயின்பறிப்பு சம்பவங்கள் பத்திரிக்கைகளில் , சமூக வலை தளங்களில் பெரிதும் விமர்சனத்துக்குள்ளாகியது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலத்த கண்டனத்தை தெரிவித்தனர்.

உயர்நீதிமன்றமும் தனது பங்குக்கு இதையெல்லாம் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என தெரிவிக்க வேண்டும் என கேட்டுள்ளது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் தானாக முன்வந்து வழக்கை எடுத்து தீர்ப்பளிக்க வேண்டி இருக்கும் என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை காவலர்களுக்கான மோட்டார் சைக்கிள் , சைக்கிள் வழங்கும் பணியை துவக்கி வைத்த முதல்வர் உடனடியாக ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொண்டார்.


இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைசெயலாளர் ராம மோகன் ராவ், உள்துறை செயலாளர் அபூர்வா வர்மா, டிஜிபி அஷோக்குமார், கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், உளவுப்பிரிவு ஐஜி சத்திய மூர்த்தி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கடுமையான கோபத்தில் இருந்த முதல்வர் ஸ்வாதி வழக்கு போகும் விதம் பற்றி கேட்டுள்ளார். அதற்கு டி.கே.ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அது திருப்தி அளிக்காததால் முதல்வர் சற்று கடுமையாகவே பேசியுள்ளார்.

அதன் பிறகு கோர்ட் விவகாரத்தை எப்படி சமாளிக்க போகிறீர்கள் என்று கேட்டுள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு எடுப்பதற்கு முன்னர் குற்றவாளியை கைது செய்யவேண்டும் ஆனால் அது நடப்பதாக தெரியவில்லை சிபிஐடிக்கு கவுரவமாக வழக்கை மாற்றி விடலாம் என்று கூறியதாக தெரிகிறது.

பின்னர் காவல்துறையில் காலிபணியிட பிரச்சனை , காவல்துறைக்கான குறைகள் பற்றி பேசிய முதல்வர் அதுபற்றி ஆலோசித்து விரிவான அறிக்கை தரவும் கூறியுள்ளார்.

சுவாதி கொலை விவகாரத்தில் குற்றவாளி இதுவரை கைது செய்யப்படாததில் முதல்வர் கடுமையாக தனது அதிருப்தியை காட்டியுள்ளார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் தலையை குனிந்துள்ளனர்.

மீண்டும் மாலையிலும் முதல்வர் அல்லாமல் டிஜிபி , கமிஷனர், கூடுதல் கமிஷனர், உள்துறை செயலாளர் உட்பட அனைவரும் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர். 

No comments:

Post a Comment