Wednesday 29 June 2016

ஸ்வாதி கொலையாளிக்கு சூளைமேட்டில் தங்க அடைக்கலம் கொடுத்த நபர் யார் - இரண்டு மணி நேரம் தங்கியிருந்த பின்னர் ஓட்டமா?


ஸ்வாதி கொலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் வேலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த கொலை வழக்கில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கியமாக மூன்று கோணத்தில்  விசாரணையை நகர்த்துகின்றனர்.1. காதலன் தரப்பு அல்லது காதல் குறித்த பிரச்சனை, 2. ஸ்வாதியின் குடும்பத்தார் உறவினர் நட்புகள் பக்கம், 3. புதிய கோணத்தில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

இதில் முதல் கோணத்தில் போலீசார் விசாரித்த வரையில் காதலனே தானாக விசாரணைக்கு வந்ததும், போலீசாருக்கு முழு ஒத்துழைப்பும் தருவதால் போலீசார் விசாரணை அந்தப்பக்கம் தீவிரமாக இல்லை.



மற்றொரு கோணம் ஸ்வாதியின் பக்கம் விசாரணை நடத்துவது, மூன்றாவது கோணம் இதெல்லாம் இல்லாமல் புதிய கோணத்தில் விசாரணையை அணுகுவது. இப்படி அணுகிய போது போலீசாருக்கு புதிய தகவல் கிடைத்துள்ளது.

கொலை நடந்த விதம் கொலையாளி சுவாதியை தாக்கி கொன்ற விதம் பின்னர் கொலையாளி ஸ்வாதியின் செல்போனை குறிப்பாக எடுத்து சென்றது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்டு ஒத்திகை பார்த்து பின்னர் கொலை சம்பபவம் அரங்கேறியுள்ளது தெரிய வந்துள்ளது.

ஸ்வாதியின் செல்போனில் அடங்கியுள்ள தகவல் யாருக்கோ தேவை பட்டுள்ளது, அல்லது ஸ்வாதியினால் அந்த நபருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும், அல்லது ஸ்வாதியை அழித்தால் அவரது அடையாளத்தையும் அதாவது ஸ்வாதியுடன் தனது தொடர்பு பற்றிய தகவலை அழிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு நபருக்கு இந்த செல்போன் தேவைப்பட்டிருக்கலாம்.

கொலை நிகழ்ந்தவுடன் கொலையாளி எடுத்து சென்ற செல்போனின் டவரை போலீசார் சோதனையிட்ட போது செல்போன் டவர் இரண்டு மணி நேரமாக சூளைமேடு பகுதியிலேயே  காட்டியுள்ளது. காலை 8.30 மணி வரை செல்போன் சூளைமேட்டை தாண்டவில்லை.

இதனால் கொலையாளி கொலை நிகழ்ந்தவுடன் சம்பந்தப்பட்ட செல்போனுடன் சென்றுள்ளான். ஏற்கனவே திட்டமிட்டபடி கொலையாளியை அனுப்பிய நபர் சூளைமேட்டில் எங்காவது ஒரு இடத்தில் அவனை தங்க வைத்திருக்கலாம். இரண்டு மணி நேரம் அங்கு பதுங்கியிருக்கலாம்.

கொலையாளி அந்த நபரிடம் செல்போனை கொடுத்தவுடன் , செல்போனை பெற்ற அந்த நபர் அதன் பதிவுகள் அல்லது தனக்கு தேவையான போட்டோக்களோ, வீடியோவோ அல்லது வேறு எதாவது தகவலோ உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னர் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்திருக்கலாம்  அல்லது உடைத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

அதுவரை அந்த இடத்தில்  அடைக்கலமாகி இருந்த கொலையாளி பின்னர் பாதுகாப்பாக அனுப்பட்டிருக்கலாம். பின்னர் செல்போனுடன் அந்த நபரும் சென்றிருக்கலாம், கூலிப்படை கொலையாளி ரெண்டு மணிநேரம் சூளைமேட்டிலேயே தங்கி இருக்கிறான் என்றால் எல்லாமே திட்டமிட்டு பிளான்படி  நடந்துள்ளது என தெரிகிறது.

கொலையாளியை அனுப்பிய நபருக்கு சூளைமேட்டில் வீடு அல்லது எதாவது நிறுவனம் இருக்கலாம். அல்லது லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி இருக்கலாம். ஆகவே அந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

முன்பே திட்டமிட்டு கொலை செய்த பின்னர் அரிவாளுடன் ஓடிய கொலையாளி ரெயில்வே டிராக் அருகில் உள்ள மின்சாரப்பெட்டி பின்புறம் கத்தியை வைத்து விட்டு பிறகு ஒன்றுமே நடக்காதது போல் சென்றுள்ளான். கொலையாளி ஸ்வாதி ரயில்நிலையத்துக்குள் சென்ற பிறகே ரயில் நிலையம் நோக்கி சென்றதும், கொலை செய்தபின்னர் இடது கையில் கத்தியை பிடித்தபடி வேகமாக ஓடிவருவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

பின்னர் கைரேகையை துடைத்துவிட்டு கத்தியை வைத்துவிட்டு செல்வதும் , சூளைமேடு நெடுஞ்சாலையில் செல்வதும் போலீசாரின் புதிய  தேடலில் சிக்கிய கேமரா காட்சி பதிவுகள் தெரிவிக்கிறது.

இதன் மூலம் ஏற்கனவே இதற்கான ஒத்திகையை கொலையாளியும் அவனது சகாவும் செய்திருக்கலாம்,  இரண்டு மூன்று நாட்களுக்கு முந்தைய

காட்சி பதிவுகளை பார்த்தால் உண்மை வெளிப்படலாம் என்பதால் அதற்கான தேடலும் நடந்து வருகிறது.

இதில் குற்றவாளி பிடிபட்டால் அது போலீசாரின் புலன் விசாரணையில் ஒரு மைல்கல்லாக இருக்கும்.


No comments:

Post a Comment