Tuesday 28 June 2016

பூமாரங்காக திரும்பிய பேஸ் புக் பதிவு - ஒய்.ஜி மகேந்திரனை போலீசார் விசாரிப்பார்களா?


கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஸ்வாதி கொலை விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகிகொண்டே போகிறது. இது வரை குற்றவாளி பிடிபடாததும் குற்றவாளிகுறித்த சிறு துப்பு கூட கிடைக்காததும் அதிகமாக விமர்சனத்துக்குள்ளாகிறது. 

இதில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் அலைந்து திரியும்போது காமெடி நடிகர் ஒய்ஜி மகேந்திரன் தனது ஃபேஸ் புக் பக்கத்தில்  குற்றவாளி பற்றி பெயருடன்  போட்டுள்ள பதிவு சர்ச்சையை எழுப்பியுள்ளது. 

அதில் அவர் ஸ்வாதியின் ஜாதியை குறிப்பிட்டு அவர்  பிலால் மாலிக் என்பவரால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார், அவர்  அந்த சமூகம் என்பதால் தான்  தமிழகத்தில் மயான அமைதி நிலவுகிறது,வேறொரு சமூகத்தை குறிப்பிட்டு அந்த ஜாதியாக இருந்திருந்தால் ராகுல் ஓடி வந்திருப்பான்,ஊடகங்கள் ஒப்பாரி வைத்திருப்பார்கள்,  தலித் அமைப்புகள் பொங்கியிருப்பார்கள் , காம ரேட்டுகள்,மாதர் சங்கங்கள், திராவிட அமைப்பினர் பற்றி கொச்சையாக பதிவிட்டு தரக்குறைவாக பதிவிட்டுள்ளார்.

இது பலத்த சர்ச்சையை கிளப்பி உள்ளது வாட்ஸ் அப்புகளில் அவரது பதிவை போட்டு ஜாதிய , மத உணர்வை தூண்டுவதாக ஒரு புறமும், குற்றவாளியை பிடிப்பதற்கு முன்னரே குற்றவாளி இன்னார் தான் என பெயரை போட்டதால் அவரிடம் குற்றவாளி பற்றி விசாரிக்க வேண்டும் என சிலரும் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர். 

இதற்கிடையே வேறொருவர் பதிவை தாம் தமது ஃபேஸ்புக்கில் போட்டுவிட்டதாக ஒய்ஜி மகேந்திரன் கூறியுள்ளார். ஆனால்  போலீசார் அவரிடம் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க உள்ளனர். வழக்கு விசாரணை மும்மூரமாக நடந்து வரும் வேலையில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும் விசாரணையில் குறுக்கீடும் செய்வதால் அவர் மீது வழக்கு பாயலாம்  என்கின்றனர். 

ஒய்.ஜி.மகேந்திரன்  பிலால் எனும் பெயரை குறிப்பிட்ட பதிவு தன்னுடையது அல்ல, அதை தான் உருவாக்கவில்லை என்கிறார். ஆனால் அவர் உருவாக்கியது இல்லை என்றால் யார் உருவாக்கினார்களோ அவரின் பெயருடன் பதிவிட்டிருக்க வேண்டும் . 

அதைவிடுத்து தனது கருத்து போல் பதிவிட்டு விட்டு இப்பொழுது, இல்லை என்று மாற்றி சொல்வது சட்டப்படி செல்லாது. அவர் பதிவிடவில்லை என்றாலும் ஒரு வதந்தியை பரப்புவதும் சட்டப்படிக் குற்றமே. இந்திய தண்டனைச் சட்டம் 505 இன் கீழ் 3 வருட சிறைத் தண்டனை கொடுக்கலாம் என வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார். 

ஒய்.ஜி வசனத்தை, நாடகத்துடன் நிறுத்தியிருக்கலாம். பேஸ்புக் பதிவு பூமாரங் போல அவரை நோக்கி திரும்பியுள்ளது.

No comments:

Post a Comment