Tuesday 28 June 2016

எளியவர்களிடம் வீரம் காட்டும் காவல் துறை - வாட்ஸ் அப்பில் பரவும் போட்டோ



தமிழக காவல்துறை பல்வேறு சிறப்புகள் கொண்டது என்றாலும் அங்காங்கே சில போலீசாரின் செயல்கள் போலீஸ் துறைக்கே களங்கத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் மத்தியில் வெறுப்பையும் முகச்சுளிப்பையும் உண்டு பண்ணுகிறது.


சாதாரண எளியவர்களிடம் காவலர்கள் சிலர் சட்டத்தை கடுமையாக நிலை நாட்டுவதும் எதிர்த்து பேசமாட்டார்கள் என்பதால் நினைப்பதை செய்வதும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சாதாரண தினக்கூலிகள் அவர்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தை தடை செய்வதும் பிளாட்பாரத்தில்  பூ விற்கும் பழம் விற்கும் நடைபாதை வியாபாரிகளால் தான் போக்குவரத்துக்கே இடைஞ்சல் என்று தீவிரமாக சட்டத்தை நிலை நாட்டுபவர்கள் அதே ஊரில் இருக்கும் பெரிய மனிதர் வீட்டு வாகனங்கள் சாலையை அடைத்து நிற்கும் போது கண்டும் காணாமல் போவார்கள்.


அப்படி சாதாரணமாக மாத்தூர் பேருந்து நிலையத்தில் பிழைப்பிற்காக மரவள்ளி கிழங்கு விற்றுக்கொண்டிருந்த பெண்ணை துரத்தி துரத்தி அடித்து இழுத்து சென்ற மத்தூர் சிறப்பு காவல் ஆய்வாளர் ஒருவரின் செயலை பயணி ஒருத்தர் படம் பிடித்து வாட்ஸ் அப்பில்  போட்டு விட அது வைரலாக பரவி வருகிறது.

No comments:

Post a Comment