Friday 1 July 2016

இடியாப்ப சிக்கலில் ஸ்வாதி கொலை வழக்கு - அலுவலக நண்பர் சிக்கினார்?


தமிழக போலீசார் வரலாற்றில் ஆளவந்தார் கொலை வழக்கு மிகப்பிரபலம். 1950 களில் சென்னையில் ஆளவந்தார் கொலை வழக்கு சென்னையில் மிகப்பிரபலம். துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் ஒன்று டிரங் பெட்டியில் அடைக்கப்பட்டு ராமேஷ்வராம் மெயிலில் அனுப்பி வைக்கப்பட அது மதுரையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அடையாளம் காணமுடியாமல் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கில் தனது கணவ்ரை காணவில்லை என ஒரு பெண் புகார் அளிக்க அது அந்த பெண்ணின் கணவார் ஆளவந்தாரின் உடலா என மீண்டும் பரபரப்பு தொற்றிகொண்டது.

அதன் பின்னர் ராயபுரம் அருகே கடற்கரையில் சட்டைதுணியில் சுற்றப்பட்ட தலை ஒன்று கிடைக்க தலையும் உடலும் சென்னை அரசு மருத்துவ மனையில் ஒப்படைக்கப்பட்டது. தடயவியல், பாரன்சிக் முறை அவ்வளவாக முன்னேற்றமடையாத நேரம்.

முதன் முதலாக இந்த வழக்கில்தான் தடயவியல் துறையின் முக்கியத்துவம் அறியப்பட்டது. உடல் கூறுவியலிலும் தடயவியல் துறையிலும் இந்த வழக்கு முன்மாதிரியாக பேசப்பட்டது. இக்கொலை வழக்கில் பிரேதப் பரிசோதனை செய்த சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர் சி.பி.கோபால கிருஷ்ணன் பிரபலம் அடைந்தார்.

பின்னாட்களில், இம்மாதிரியான பல கொலை வழக்குகளில் பிரேதப் பரிசோதனை செய்து அறிக்கை அளிப்பதற்கு இவரே சிபாரிசு செய்யப்பட்டார். செய்தித்தாள்களிலும் ஏனைய ஊடகங்களிலும் கொலையைப் பற்றிய செய்திகளும் அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டன. 


குற்றவாளி தம்பதிகள் பின்னர் கைது செய்யப்பட்டனர். அதே போன்றதொரு பரபரப்பான கொலை தான் ஸ்வாதியின் கொலையும். கொலைக்கான நோக்கம் என்னவென்று அறிந்து கொள்வதுதான் புலனாய்வின் முதற்படி. அதிலிருந்துதான் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி செல்வர்.

ஆனால் ஸ்வாதி கொலை வழக்கில் இதுபோன்றதொரு எந்த முடிவுக்கும் போலீசாரால் வர முடியவில்லை. குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் இல்லை என்ற கருத்தும் பரவலாக போலீசார் மத்தியில் வைக்கப்படுகிறது.

வெட்டியவன் கூலிப்படை ஆள் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. ஆனால் சாதாரண இளம்பெண்ணை கொல்லும் அளவுக்கு கூலிப்படையை யார் ஏவுவார்கள் நோக்கம் என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது.

போன் கால்கள் செக் பண்ணுவது, சிசி டிவி கேமரா பதிவுகள் உருவத்தை அடையாளம் காண உதவியது ஆனால் அந்த படத்தில் உள்ளவன் இவன் தான் என்று யாராலும் உறுதியாக தெரிவிக்க முடியவில்லை. 

தினம் தினம் புது புது தகவல்கள் வந்தாலும் எல்லாமே ஒரு கட்டத்திற்கு மேல் நகர மறுக்கிறது. ஐந்து லட்சம் போன் கால்கள் ஆயிரக்கணக்கானோரிடாம் விசாரணை, நூற்றுக்கும் மேற்பட்ட நெருங்கிய நண்பர்கள் உறவினர்களுடனும் விசாரணை என நீண்டுகொண்டே போகிறது.

இதனிடையே இன்று ஸ்வாதியுடன் நெருக்கமாக  ஃபேஸ் புக் சாட்டிங்கில் அதிகம் ஈடுபட்ட நொலம்பூர் வாலிபரை போலீசார் பிடித்து தனி இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இவன் ஸ்வாதியின் கம்பெனியில் வேலை செய்தவன் எனபது குறிப்பிடத்தக்கது. காதலனின் தம்பி மற்றும் அவனது நண்பர்கள், காதலனின் நண்பர்கள் என பத்துக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடக்கிறது.

அதே போல் ஸ்வாதியின் நிறுவனத்தில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை விசாரணை நடத்துகின்றனர். ஒருவரை கூட விடாமல் இந்த விசாரணை நடக்கின்றனர். 

இது தவிர ஸ்வாதி சமபந்தப்பட்ட அனைத்து கம்ப்யூட்டர் , ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சேகரித்து அதற்காக தனி வேலை நடக்கிறது.

தற்போது கொலையாளி மோட்டார் சைக்கிளில் சென்ற கண்காணிப்பு கேமரா பதிவு ஒன்றையும் போலீசார் கைப்பற்றி ஆராய்ந்து வருகின்றனர். புதிய கோணங்களில் விசாரணை பலன் தருமா ? இடியாப்ப சிக்கல் விடுபடுமா எனபது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.






No comments:

Post a Comment